துணிவு, வாரிசு போட்டி.! திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…

thunivu-varisu
thunivu-varisu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித் நடிகர் விஜய் அவர்கள் தற்போது தெலுங்கு திரைப்பட இயக்குனரான வம்சி இயக்கத்தில் வெளியாக காத்திருக்கும் வாரிசு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒரு குடும்ப செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ள அந்த திரைப்படத்தில் மூன்று சண்டை காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மூன்று சண்டை காட்சிகளும் கேஜிஎப் பட ரேஞ்சுக்கு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்காக தற்போது படகுழு பிரமோஷனில் இறங்கி இருக்கிறது. மேலும் நடிகர் விஜய்யும் தனிப்பட்ட முறையில் ரசிகர்களை அழைத்து பிரியாணியை கொடுத்து பிரமோஷன் செய்து வருகிறார். மேலும் வாரிசு திரைப்படத்திலிருந்து ரஞ்சிதம் ரஞ்சிதமே பாடலும், தீ தளபதி பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி ரசிகர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாக உள்ள வாரிசு திரைப்படத்திற்காக எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 67 திரைப்படத்திற்கான அப்டேட்திற்காகவும் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் அதே தினத்தில் அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியாக இருக்கும் துணிவு திரைப்படம் வெளியாகிறது. பல ஆண்டுகள் கழித்து இரண்டு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகுவதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களில் எந்த படம் வெற்றி அடையும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை, திரைப்படத்தை தொடர்ந்து எச் வினோத் கூட்டணியில் அஜித் அவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படமான துணிவு திரைப்படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எச் வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பில் கலவையான விமர்சனத்தை பெற்று இருக்கிறது இதனால் மூன்றாவது முறையாக அஜித் அவர்கள் எச் வினத்துடன் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்திற்கு அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் ஹெச் வினோத் அவர்கள் ஒரு பேட்டியில் இந்த படம் முழுக்க முழுக்க என்னுடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு எடுக்கப்பட்டு இருக்கிறது ஆகையால் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார். வாரிசு, துணிவு திரைப்படங்கள் வெளிவர காத்திருக்கும் நிலையில் ரசிகர்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் அடித்துக்கொள்ளாத ஒரு குறையாக சண்டை போட்டு வருகிறார்கள்.

ரசிகர்கள் ஒரு பக்கம் அடித்து கொண்டு இருக்க தியேட்டர் உரிமையாளர்கள் ஒரு பக்கம் பதட்டத்திலேயே இருக்கிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு தகவலின் படி அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படத்திற்கு குறைந்த தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி பகுதிகளில் வினியோகஸ்தர்கள் சமரசமாக பேசிக்கொண்டு தங்களுடைய படத்திற்கு சரிசமமாக தியேட்டர்கள் ஒதுக்கி கொண்டுள்ளனர். அதாவது வாரிசு மற்றும் துணிவு ஆகிய படங்களை தலா இரண்டு காட்சிகள் திரையிட வேண்டுமென விநியோகஸ்தர்கள் சமரசமாக பேசி முடிவு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.