வசூல் ரீதியாக வெற்றி பெற்ற திரைப்படம்.! துணிவா.. வாரிசா.. வெளிவந்த பைனல் ரிப்போர்ட்

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவர்கள் அஜித் மற்றும் விஜய்.. இவர்கள் இருவரும் வருடத்திற்கு தற்பொழுது ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர். கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜய்யின் வாரிசு படங்கள் நேருக்கு நேர் மோதின.. இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..

அதன் பின் ஒரு வாரம் கழித்து இரண்டு திரைப்படங்களையும் குடும்ப அடியன்ஸ் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார் குறிப்பாக அஜித்தின் துணிவு திரைப்படம் செண்டிமெண்ட், நல்ல மெசேஜ், காமெடி, action என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் அனைவருக்கும் ரொம்ப பிடித்தது இதனால் அனைத்து ஏரியாக்களிலும் துணிவு திரைப்படத்தின் வசூல் அதிகரித்தது.

தமிழகத்தில் மட்டுமே 110 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது உலகம் முழுவதும் இந்த திரைப்படம் 210 கோடிக்கு மேல் வசூல் அள்ளியதாக தகவல்கள் வெளிவந்தன தொடர்ந்து இரண்டு திரைப்படங்களும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது இதுவரை மட்டுமே 50 நாட்களைக் கடந்துள்ளதாக வெற்றிகரமாக பயணிக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் இரண்டு திரைப்படங்களும் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது எந்த படம் ரியல் வின்னர் என்பது குறித்தும் தகவல் கசிந்துள்ளது. விஜயின் வாரிசு திரைப்படம் இதுவரை 295 கோடியும், துணிவு திரைப்படம் 225 கோடியும் வசூல் செய்து உள்ளதாம். வசூல் ரீதியாக வாரிசு வெற்றி பெற்று இருந்தாலும்..

தயாரிப்பாளருக்கு லாபத்தை கொடுத்தது என்னவோ துணிவு திரைப்படம் தானாம்.. வாரிசு திரைப்படம் தயாரிப்பாளர்கள் 30 கோடி லாபத்தை பெற்று தந்தது ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் 50 கோடிக்கு மேல் தயாரிப்பாளருக்கு லாபத்தை பெற்று உள்ளது. இதன் மூலம் ரியல் வின்னர் யார் என்பது மக்களுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது என கூறப்படுகிறது.