தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் துணிவு. இந்த திரைப்படத்தை ஹச் வினோத் இயக்கி உள்ளார் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் போனி கபூர் தயாரித்து உள்ளார் படம் நேற்று திரையரங்குகளில் கோலாகலமாக ரிலீஸ் ஆனது.
படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி இருந்தாலும் இந்த படத்தில் சென்டிமென்ட், சமூக அக்கறை உள்ள கருத்துக்கள், ஆக்சன் என அனைத்தும் நிறைந்த ஒரு படமாக இருந்தது. இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் சும்மா ஜாலியாக, நக்கலும், நையாண்டியும் கலந்து நடித்து உள்ளார்.
அவருடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, பிரேம், சோமசுந்தரம் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர். படம் வெளிவந்ததிலிருந்து தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ரசிகர்கள் தொடங்கி குடும்பத்தினர்.
வரை அனைவரும் துணிவு திரைப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் முதல் நாள் முடிவில் பல்வேறு இடங்களில் அதிக வசூலை அள்ளி புதிய சாதனை படைத்திருக்கிறது துணிவு திரைப்படம் அதன்படி பார்க்கையில்.. துணிவு திரைப்படம் நேற்று ஒருநாள் முடிவுகள் மட்டுமே அமெரிக்காவில் 400k வசூலித்து உள்ளதாம்.
அதே போல துணிவு திரைப்படம் நேற்று மட்டும் கர்நாடகாவில் சுமார் 5 கோடி வசூலித்து இருக்கிறதாம் இதன் மூலம் அங்கு போட்ட காசை எடுத்துள்ளதாம்.. இனி வருகின்ற நாட்களில் லாபத்தை பார்க்கும் என சொல்லப்படுகிறது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.