ஐந்து நாட்களில் பிரம்மாண்ட வசூலை செய்த துணிவு.! எத்தனை கோடி தெரியுமா.?

thunivu
thunivu

இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் போனி கோபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் பல சாதனைகளை படைத்து வருகிறது. நடிகர் அஜித்தின் துணிவு மற்றும் விஜயின் வாரிசு ஆகிய இரண்டு படமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் வெளியானது.

இதில் விஜயின் வாரிசை விட அஜித்தின் துணிவு முதல் நாளில் மட்டுமே 24 கோடி வரை வசூலித்து வரிசை ஜெயித்து வந்தது இதனை தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களின் வசூல் நிலவரம் குறித்து அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது ஆனால் இதில் சில வசூல் கணக்கு பொய்யான வசூல் கணக்காக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் செய்யாத ஒன்றை துணிவு திரைப்படம் செய்து வருகிறது அதாவது இதுவரைக்கும் அஜித்தின் திரைப்படங்கள் இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் பெரிதாக ஓடவில்லை. ஆனால் இந்த முறை அப்படி கிடையாது இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அதே போல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிலும் குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் மலேசியாவில் சக்கை போடு போட்டு கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மலேசியாவில் இதுவரைக்கும் எந்த ஒரு திரைப்படத்தையும் அந்த அளவிற்கு கொண்டாடாத ரசிகர்கள் துணிவு திரைப்படத்தை மிகவும் ஆரவாரமாக கொண்டாடி உள்ளார்கள் இந்த வீடியோ சமீபத்தில் ட்ரெண்டானது.

இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்களை முடிவடைந்த நிலையில் உலக அளவில் பிரம்மாண்ட வசூலை செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. துணிவு திரைப்படம் வெளியாகி ஐந்து நாட்கள் முடிவில் 250 கோடி வசூலித்து வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதனால்தான் நடிகர் அஜித் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுகிறார்.