நடிகர் அஜித்குமாருக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவருடன் தொடர்ந்து பயணிப்பது வழக்கம் அந்த வகையில் சிறுத்தை சிவாவை தொடர்ந்து இயக்குனர் ஹச். வினோத்துடன் கைகோர்த்து தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் இவர்கள் இதுவரை நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு திரைப்படத்தில் பணியாற்றி வருகிறனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்ட அதன் பிறகு சென்னை இப்போ இறுதி கட்ட ஷூட்டிங் இருக்காங்க படக்குழு பாங்காங் சென்று இருக்கிறது. துணிவு திரைப்படம் ஒரு முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து படமாக உருவாகி வருகிறது அதேசமயம் இந்த படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, யோகி பாபு, சமுத்திரகனி, மகாநதி சங்கர், அஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர். இந்த படத்தில் இருந்து இதுவரை பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி உள்ளது அதன் பிறகு எந்த ஒரு அப்டேட்டையும் படக்குழு கொடுக்கவில்லை.
ஆனால் அஜித் பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது நிறைவுறும் என பலரும் எதிர்நோக்கி இருக்கின்றனர் அதற்கான பதிலும் தற்பொழுது கிடைத்திருக்கிறது படக்குழு பாங்காங்கில் படத்தை விறுவிறுப்பாக எடுத்து வருகிறதாம்.
அதுவும் அங்கு ஆக்ஷன் சீக்வென்சை தான் இயக்குனர் படமாக்கி வருகிறாராம் இந்த படத்தின் படப்பிடிப்பு மொத்த ஷூட்டிங்கும் அக்டோபர் 12ஆம் தேதி முடியும் என தகவல் வெளிவந்துள்ளது. படப்பிடிப்பை முடித்ததை தொடர்ந்து போஸ்ட் ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்தும் என கூறப்படுகிறது படம் அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது.