அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி இரண்டு நாட்களை கடந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது நாட்களில் வெற்றி நடை போட்டு வருகிறது. துணிவு படத்துடன் விஜயின் வாரிசு படமும் மோதிக்கொண்டது இதனால் விஜய் அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
வெளி வருவதற்கு முன்பு படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும் வெளியான பிறகு ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வந்தார்கள் அந்த வகையில் சென்னையில் ரோகிணி திரையரங்கிற்கு முன்பு தல ரசிகர்கள் திருவிழா கோலம் போல் கூட்டம் கூட்டமாக குவிந்து இருந்தனர்.
அந்த கூட்டத்தில் ஒரு சோகமான நிகழ்வு நடந்தது அதாவது தல ரசிகர் பரத்குமார் என்பவர் மெதுவாக சென்று இருந்த லாரி மீது ஏறி துணிவு படத்திற்காக ஆரவாரமாக ஜாலியாக தனது நண்பர்களுடன் கொண்டாடியிருந்தார் அப்போது எதிர்பாராத விதமாக கிழே விழுந்து முதுகு தண்டுவடம் முறிந்து விட்டது.
இதனால் பரத்குமார் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த சம்பவம் அஜித் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலையில் படம் நன்றாக ஓடுமா ஓடாதா என்ற கவலை பலருக்கும் இருந்தது. ஆனால் துணிவு திரைப்படம் வெளியான முதல் நாளில் 21 கோடி வசூல் செய்துள்ளது அதனை தொடர்ந்து இரண்டாவது நாளான நேற்று உலகம் முழுவதும் துணிவு திரைப்படம் 27 முதல் 32 கோடி வரை வசூல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
விடுமுறை இல்லாத நாட்களே இவ்வளவு வசூல் செய்த துணிவு விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வசூல் சக்கரவர்த்தியாக இருந்த விஜயின் வாரிசு படமே 17 கோடி மட்டும் தான் வசூல் செய்து இருக்கிறது ஆனால் வருடத்திற்கு ஒரு படம் மட்டும் கொடுத்த நடிகர் அஜித்தின் திரைப்படமான துணிவு வெளியாகி இரண்டு நாட்களில் 27 கோடி வசூல் அள்ளியது என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தி வருகிறது.