தனது நடிப்பு மற்றும் நடத்தையின் மூலம் கோடான கோடி ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளவர் நடிகர் அஜித் குமார். இவர் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61வது திரைப்படமான துணிவு திரைப்படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இளம் இயக்குனர் ஹச். வினோத் இந்த படத்தை இயக்கி உள்ளார்.
போனி கபூர் மிகப் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்துள்ளார். துணிவு திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, யோகி பாபு, மகாநதி சங்கர், இளம் நடிகர் வீரா, ஜான் கொக்கன், அஜய் மற்றும் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பவானி, சிபி போன்றவர்களும் நடித்துள்ளனர்.
இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. துணிவு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆகிறது துணிவு திரைப்படத்தை எதிர்த்து விஜய்யின் வாரிசு திரைப்படமும் களம் காண்கிறது. விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகிறது.
அதற்கு போட்டியாக தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் தெலுங்கிலும் விஜய்க்கு போட்டியாக வெளியாக உள்ளது. தமிழில் துணிவு என பெயர் வைக்கப்பட்டுள்ளது தெலுங்கில் தெகிம்பு என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தெலுங்கு மற்றும் ஆந்திராவில் வெளியிடும் உரிமையை ராதாகிருஷ்ணன் என்டர்டைன்மென்ட்..
மற்றும் IVY புரொடக்ஷன் ஆகிய இரு நிறுவனங்களும் பெற்று இருக்கின்றன இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாரிசு பட குழுவிற்கு செம்ம அதிர்ச்சியை கொடுத்திருக்கிறதாம். இதை அறிந்த அஜித் ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருந்துள்ளனர் மேலும் இந்த தகவலை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு பெரிய அளவில் பரப்பி வருகின்றனர்.
Proud to announce our Andhra Pradesh and Telangana distributor @Radhakrishnaen9 @IVYProductions9 #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@boneykapoor @bayviewprojoffl @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa @nirav_dop pic.twitter.com/r07R94QKZp
— Zee Studios (@ZeeStudios_) December 21, 2022