நடிகர் அஜித்குமார் வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 61 திரைப்படமான துணிவு திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து முடித்துள்ளார் படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதே தேதியில் தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இதன் மூலம் எட்டு வருடங்கள் கழித்து படங்களின் மூலம் மீண்டும் ஒரு முறை நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். அஜித்தின் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவி நிறுவனம் ரிலீஸ் செய்கிறது. விஜயின் வாரிசு படத்தை லலித் குமார் படத்தை ரிலீஸ் செய்கிறார் இதில் அதிக திரையரங்குகளை துணிவு திரைப்படம் தான் கைப்பற்றி இருக்கிறது.
என கூறப்படுகிறது வாரிசு படத்தை விட 100க்கும் மேற்பட்ட திரையரங்குகள் துணிவுக்கு இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் தமிழகத்தில் வாரிசு திரைப்படத்தை மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக கொண்டு வர தற்பொழுது விஜய் சரியான பிளான் போட்டுள்ளாராம் அதாவது திடீரென பனையூரில் தனது நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை அழைத்து பேசி உள்ளார்.
விஜய் அதில் அவர் சொன்னது இந்த பொங்கல் ரேஸில் நமது படம் ஜெயிக்க வேண்டும் என அவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்க்கு இந்த படத்தை ஜெயிச்சே ஆக வேண்டும் என்ற குறிக்கோளில் இருக்கிறாராம். முன்பு அஜித் தோல்வி படங்களை கொடுத்துக் கொண்டிருந்தார் அப்பொழுது விஜய் தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்திருந்தால் அவர் மார்க்கெட் அதிகமா இருந்தது.
ஆனால் இப்பொழுது சரிக்கு சமமாக அஜித்தின் விஜயையும் ஓட்டுவதால் அஜித்தின் கை ஓங்கி இருக்கும் என கூறப்படுகிறது. படம் ரிலீஸ் ஆகும் பொழுதும் அவரது கை தான் அதிகமாக ஓங்கி இருக்கும் என தெரிய வருகிறது. இதனால் விஜய் தன்னால் என்ன முடியுமோ அந்த எல்லா வழிகளிலும் யோசித்து படத்தை வேற லெவலில் வெற்றி பெற செய்ய திட்டம் போட்டு வருகிறாராம்.