அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் போஸ்டரை வெளியிடும் துணிவு படகுழு.! இந்த முறை யார் தெரியுமா?

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நச்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித்குமார் இவர் தற்போது துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளி வர காத்திருக்கிறது இதனால் ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து துணிவு படத்திலிருந்து தற்போது அப்டேட்டுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் நேற்று துணிவு படத்தில் இருந்து ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தனர். அந்த வகையில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ள ஒவ்வொரு நடிகர்களின் கதாபாத்திரம் குறித்து போஸ்டர் உடன் இன்று படக்குழுவினர் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் முதலில் துணிவு திரைப்படத்தில் மோகன சுந்தரம் நடித்துள்ள கதாபாத்திரத்தை வெளியிட்ட உள்ளார்கள் அதாவது மோகன சுந்தரம் இந்த படத்தில் மைபா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல மேலும் ஒரு கதாபாத்திரத்தை துணிவு பட குழு வெளியிட்டுள்ளனர்.

அதாவது நடிகர் பிரேம் அவர்கள் துணிவு திரைப்படத்தில் பிரேம் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தற்போது ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர் மதியம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.  அது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது அதாவது பக்ஸ் அவர்கள் துணிவு படத்தில் ராஜேஷ் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் அடுத்தடுத்த கதாபாத்திரங்களின் போஸ்டரை இன்று படகுழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக நடிகர் அஜித்குமார் துணிவு திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் உடன் இணைந்து சிபி சக்கரவர்த்தி, பாவனி மற்றும் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில் துணிவு படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் அந்த வகையில் டிசம்பர் 31ஆம் தேதி துணிவு படத்தின் டிரைலர் வெளியாகலாம் என சமூக வலைதளத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது.