தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகர் அஜித். இவர் இயக்குனர் ஹச் வினோத்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து துணிவு திரைப்படம் நாளைக்கு திரையரங்கில் வெளியாக காத்திருக்கிறது. இதனை தொடர்ந்து துணிவு படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிள்ள வாரிசு திரைப்படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்திலிருந்தும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படத்திலிருந்தும் அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படத்தில் இருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
முதலில் துணிவு படத்தின் டிரைலர் வெளியானது அப்போது விஜய் ரசிகர்கள் துணிவு படத்தின் டிரைலரை பங்கமாக கலாய்த்து இருந்தார்கள் அதுமட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்தின் டிரைலரைப் பார்த்து ரசிகர்கள் இது பீஸ்ட் படத்தை போல இருக்கிறது என்றும் கூறி வந்தார்கள். அதன் பிறகு வெளியான வாரிசு படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இது மெகா சீரியல் போல் இருக்கிறது என்று விஜய் ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார்கள்.
இப்படி இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது துணிவு திரைப்படத்திலிருந்து ஒரு வீடியோ கசிந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது துணிவு திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகள் வீடியோவாக வெளியாகி இருப்பதாகவும் அந்த வீடியோ #leaked என்ற ஹாஷ்டேக்கில் உலா வருகிறது என்றும் கூறப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் இந்த ஹஷ்டேக் தற்போது தேசிய அளவில் ட்ரண்ட் ஆகி வருகிறது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் இதுபோல வீடியோவை யாரும் ஷேர் செய்ய வேண்டாம் ஏனென்றால் படத்தின் மேல் உள்ள மரியாதை குறைந்து விடும் என்றும் கூறி வருகிறார்கள். ஆனால் இதை விஜய் ரசிகர்கள் விட்டு வைக்கவில்லை இந்த வீடியோவுடன் பல மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வருகிறார்கள். இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.