நடிகர் அஜித் குமார் கடந்த சில வருடங்களாக இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் இந்த வருட பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆனது. படத்தில் அஜித்தின் நெகட்டிவ் ஷெடில் நடித்திருந்தார்.
அவருடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர், பிக்பாஸ் பிரபலங்களான சிபி, அமீர், பாவனி என பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. மேலும் துணிவு திரைப்படம் பார்ப்பதற்கு விறுவிறுப்பாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏத்திவிட்டது.
தொடர்ந்து படம் பல நாட்களாக ஹவுஸ் புள்ளாக ஓடியது அதன் விளைவாக வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது ஆம் இதுவரை மட்டுமே 250 கோடிகளுக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது. இப்பொழுதும் பல்வேறு திரையரங்குகளில் துணிவு திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இருந்தாலும் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி OTT தளத்தில் துணிவு ரிலீஸ் ஆனது.
வெளிவந்த சில மணி நேரங்களிலேயே புதிய ரெக்கார்டை படைக்க ஆரம்பித்தது. 24 மணி நேரத்தில் 27 நாடுகளில் ட்ரெண்டாகிய டாப் 10 இடத்தை பிடித்துள்ளது. இந்த சாதனையை முதன்முதலாக இந்திய ஹீரோ செய்திருக்கும் மாபெரும் ரெக்கார்டாக பார்க்கப்படுகிறது.
OTT தளத்தில் வெளியான துணிவு திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்ப்பு வருவதால் வருகின்ற நாட்களில் அடுத்தடுத்த சில சாதனைகளைப் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இதனால் துணிவு பட குழுவும் சரி, அஜித்தும் சரி செம்ம உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த தகவலை தற்போது அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.