ஓவர் சீஸில் பச்சை கொடியை பறக்கவிடும் அஜித்தின் “துணிவு” – மொத்த கலெக்ஷன் ரிப்போர்ட் இதோ

ajith
ajith

நடிகர் அஜித்குமார் கடந்த சில வருடங்களாக சமூக அக்கறை உள்ள கதைகளிலேயே நடித்து வருகிறார். கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை வலிமை போன்ற படங்கள் வெற்றி பெற்ற நிலையில் இந்த பொங்கலை முன்னிட்டு அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படமும்..

சமூக அக்கறை கலந்த ஒரு படமாக இருந்ததால்.. ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் துணிவு திரைப்படத்தில் அஜித்தின் துள்ளலான நடிப்பு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இதன் காரணமாக படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை அள்ளி ஓடிக்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு திரைப்படத்தின் வசூல் நிலவரங்கள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன அதன்படி துணிவு திரைப்படம் ஓவர் சீஸ் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து..

தகவல்கள் விலாவாரியாக வந்திருக்கின்றன அது குறித்து பார்ப்போம்.. கலெக்ஷன் நிலவரம்.. மலேசியா – $ 1.6M ( ), UAE, GCC –  $1.62M ( ), USA 1.2M ( ), சிங்கப்பூர் 0.875M ( ), UK  0.52M ( ), ஆஸ்திரேலியா நியூசிலாந்து $274k ( ), பிரான்ஸ் 223k ( ), ROW $1M ( ), OS est $7.4M ( ).

இந்த தகவலை தற்போது சமூக வலைதள பக்கத்தில் அஜித் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர் இந்த வசூல் வருகின்ற நாட்களில் இன்னும் மாறுபடும் என கூறப்படுகிறது இதனால் பட குழுவும் சரி அஜித் ரசிகர்களும் சரி சந்தோஷத்தின் உச்சியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.