thunivu movie review : அஜித் நேர்கொண்ட பார்வை வலிமை ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதற்கு முன் வெளியாகிய நேர்கொண்ட பார்வை வலிமை திரைப்படத்தில் அஜித் ரசிகர்களை கொஞ்சம் ஏமாற்றி இருந்தார் என்று கூட கூறலாம் ஆனால் துணிவு திரைப்படத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார் என்பதை இங்கே காணலாம்.
அஜித் ரசிகர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை இயக்குனர் வினோத் அவர்கள் நன்றாக புரிந்து கொண்டு இயக்கிய திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர் சமுத்திரகனி ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் துணிவு திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அஜித்தை ஆட விட்டும், அதிரடி செய்ய விட்டும், சிரிக்க விட்டும் நடிக்கவிட்டும் பொங்கல் போட்டியில் ஆட்டநாயகனாக மாற்றி உள்ளார் வினோத்.
அஜித் வரும் ஒவ்வொரு காட்சியும் திரையரங்கில் விசில் தான் சத்தமும் கைத்தட்டலும் ஓங்கி ஒலிக்கிறது. அந்த அளவு ஒவ்வொரு காட்சியிலும் அஜித் ரசிகர்களுக்கு ஏற்றது போல் நடித்துள்ளார்.
படத்தின் கதை
சென்னையில் உள்ள யுவர் பேங்க் என்ற பேங்கில் 500 கோடி ரூபாய் கொள்ளையடிக்க உதவி கமிஷனரும் சிலரும் திட்டம் தீட்டுகிறார்கள் ஆனால் அவர்கள் கொள்ளை அடிக்க சென்ற அதே பேங்கில் தான் சர்வதேச கேங்ஸ்டர் ஆன அஜித் ஒட்டுமொத்த கொள்ளையர்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் அவர் எப்படி கமிஷனர் சமுத்திரக்கனி தல தலைமையில் மிகப்பெரிய குழு ஒன்று அமைக்கப்பட்ட அஜித்துடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் உண்மையிலேயே அந்த பேங்கில் கொள்ளையடிப்பது யார் என்ற உண்மையை இந்த நாட்டு மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார் அஜித் அதை எப்படி மக்களிடம் புரிய வைக்கிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை. அதிரடி ஆக்சன் கதையில் வங்கி வாடிக்கையாளர்களிடம் வங்கிகள் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கிறார்கள் அதனை எப்படி வெட்ட வெளிச்சத்திற்கு அஜித் கொண்டு வருகிறார் என்பதுதான் மையக்கரு. மியூச்சுவல் ஃபண்ட் மினிமம் பேலன்ஸ் கிரெடிட் கார்டு என பல விஷயங்களை வைத்து மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் என்பது படத்தைப் பார்க்கும் மக்களுக்கு கதை சொல்கிறார் அஜித்.
பொதுவாக அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்தால் அந்த திரைப்படம் ஹிட் என்று கூறலாம் அந்த வகையில் மங்காத்தா படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியுள்ளார் அஜித். ஒரு சர்வதேச கேங்ஸ்டாராக அஜித் படம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அதிரடி ஆரம்பமாகிறது. அந்த அதிரடி காட்சிகள் படத்தின் கடைசி வரைக்கும் அப்படியே கொண்டு சென்றுள்ளது தான் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்.
அதேபோல் இதற்கு முன்பு அஜித்தை இப்படி ஒரு ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் பார்த்ததே கிடையாது என பலரும் கூறும் வகையில் மிகவும் ஸ்டைலாக நடித்துள்ளார் அஜித். ஒட்டுமொத்த படத்தையும் தனி ஒரு மனிதனாக தனது தோளின் மேல் சுமந்து செல்கிறார் அஜித். அஜித் எப்பயாவது தான் ரசிகர்களுக்கு ஏற்றது போல் படத்தை கொடுப்பார் அந்த வகையில் இந்த முறை ரசிகர்கள் கொண்டாடுவதற்காகவே இப்படி ஒரு கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.
அஜித் உடன் ஹீரோயினாக நடிக்கும் மஞ்சுவாரியருக்கு இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கொடுக்க முடியுமா என்று அனைவரையும் யோசிக்க வைத்துள்ளார் இயக்குனர் வினோத். அவரின் கதாபாத்திரமும் நடிப்பும் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. நேர்மையான கமிஷனராக நடித்துள்ள சமுத்திரக்கனி கான்ஸ்டபிளாக மகாநதி சங்கர் பேங்க் மேனேஜராக ஜி எம் சுந்தர் மெயின் வில்லனாக பேங்க் சேர்மனாக ஜான் கொகேன்.
டிவி ரிப்போட்டர் ஆக மோகனசுந்தரம் இன்ஸ்பெக்டராக பகவதி பெருமாள் என அனைவரும் கிடைத்த கேப்பில் அனைவரும் ஸ்கோர் செய்து வருகிறார்கள். டெக்னீசியன்களால் அதிரடியான சண்டை காட்சிகளை மிகவும் அற்புதமாக அமைத்துள்ள சுப்ரீம் சுந்தர் அவர்களுக்கு தான் முதலில் பாராட்டப்பட வேண்டிய நபர். அதேபோல் ஜிப்ரானின் இசை படத்திற்கு மிகவும் வேகத்தை கூட்டி உள்ளது.
அதேபோல் எத்தனை துப்பாக்கி குண்டுகள் எத்தனை பாம் பிளாஸ்ட் என அனைத்தையும் கணக்கெடுக்க முடியாது அதுமட்டுமில்லாமல் வழக்கம்போல் என்னதான் ஹீரோவை பார்த்து வில்லன்கள் சுட்டாலும் ஹீரோவுக்கு பெரிதாக அடியே படாது அதேபோல் சில லாஜிக் மீறல்கள் இருக்கின்றன அதுமட்டுமில்லாமல் படத்தில் தேவையற்ற காட்சிகள் என்று எதுவுமே கிடையாது பிளாஷ்பேக் காட்சிகளை கூட மிகவும் சுருக்கமாக சொல்லி முடித்துள்ளார் வினோத்.
அதுமட்டுமில்லாமல் வங்கிகள் கொடுக்கும் எந்த ஒரு விண்ணப்பத்திலும் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்தை போட வேண்டாம் பணத்திற்காக பேராசைப்பட வேண்டாம் என கடைசியாக மக்களுக்கு தேவையான ஒரு மெசேஜையும் அஜித் கூறியுள்ளார். துணிவு இரண்டாவது பாகம் வர அதிக வாய்ப்புண்டு என்பதை இந்த படத்தின் மூலம் தெரிகிறது. மொத்தத்தில் பொதுமக்கள் அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் தான் துணிவு.