2023 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறது அஜித்தின் துணிவு விஜய்யின் வாரிசு படங்கள். அஜித்தின் துணிவு திரைப்படத்தை ஹச். வினோத் இயக்கியுள்ளார். போனி கபூர் மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து இருக்கிறார் இந்த படம் முழுக்க முழுக்க பணத்தை மையமாகக் கொண்டு படம் உருவாகி உள்ளது.
இதுவரை படத்திலிருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை துல்லலாட்டம் போட வைத்த நிலையில் நாளை துணிவு படத்தின் டிரைலர் மிகப் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. மறுபக்கம் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறது
இந்த படத்தில் இருந்து வெளிவந்த அப்டேட்டுகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை துள்ளல் ஆட்டம் போட வைத்தது. இது ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் இரண்டு படங்களுமே தியேட்டர்களை கைப்பற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது தமிழகத்தில் துணிவு திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்கிறது. வாரிசு படத்தை லலித்குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ரிலீஸ் செய்கிறது
இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு தரமான தகவல் வெளியாகி உள்ளது அதாவது துணிவு திரைப்படத்தை தெலுங்கில் ராதாகிருஷ்ணா என்டர்டைன்மெண்ட் மற்றும் ஐடிஒய் இரு நிறுவனங்களும் சேர்ந்து ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு துணிவு திரைப்படத்தை கைப்பற்றி உள்ளார்
துணிவு திரைப்படத்தை அவர் விசாகப்பட்டினம் மற்றும் நிசாம் ஆகிய இரண்டு பகுதிகளில் ரிலீஸ் செய்ய இருக்கிறாராம். இந்த விஷயத்தை கேட்ட அஜித் ரசிகர்கள் விஜய் நம்பர் ஒன் நம்பர் ஒன் என்று சொல்லிட்டு இப்படி துணிவு படத்தை ரிலீஸ் செய்யலாமா எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.