H. vinoth : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக திகழ்வர் ஹச். வினோத். இவர் “சதுரங்க வேட்டை” என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து இவர் எடுத்த “தீரன் அதிகாரம் ஒன்று” மாபெரும் வெற்றி பெற்றதற்கு பிறகு டாப் ஹீரோக்களுக்கு படம் சொல்ல ஆரம்பித்தார். அஜித்துடன் முதலில் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்தார்.
அதனைத் தொடர்ந்து வலிமை படம் கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்டதால் சரியான திட்டமிட முடியாததால் இந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடியது. இதனால் சோகத்தின் பிடியில் இருந்த ஹச். வினோத்துக்கு ஊக்கம் கொடுத்தார். இவர்களது கூட்டணி துணிவு படம் உருவானது படம் கடந்த வருடம் பொங்கலை முன்னிட்டு வெளியானது.
படம் முழுக்க முழுக்க பேங்கில் நடக்கும் குளறுபடிகளை வெளிக்காட்டியது. படம் கவனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது அதனால் அதிக நாட்கள் ஓடி 230 கோடி வெற்றி கண்டது. இந்த நிலையில் தனது 42வது பிறந்தநாளை நேற்று ஹச். வினோத் கொண்டாடினார் இதற்கு பலரும் வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர்.
இந்த நேரத்தில் இரா. சரவணன் தனது twitter பக்கத்தில் ஹச். வினோத்துக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்டுள்ளார்.. ஆ. வினோத் என்கின்ற அரக்கன்.. அஜித் சாரின் துணிவு ரிலீஸ் ஆன நேரம் இயக்குனர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம் நல்ல கூதடம் என்பதால் அங்கே ஓர் அறை எடுத்து தங்கினோம் துணிவு படம் குறித்த ரிசல்ட் வந்தாலும்..
விமர்சனம் குறித்து தெரிந்து கொள்ள அவ்வளவு ஆவல் சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை தீம் மியூசிக் சந்தோஷ் ஒரு பக்கம் நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டிருந்தோம் படம் பக்கா என விமர்சனங்கள் வர அறைக்கு ஓடி வந்தேன் கையை தலையணை போல் வைத்துக் கொண்டு கால் நீ டி தூங்கிக்கொண்டிருந்தார் வினோத் யோவ் நீ எல்லாம் மனுஷனாய்யா என எழுப்பினேன்.
நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சளித்தபடி நிமர்ந்தார் படத்தை கழிவி கழிவி ஊத்தறாங்க.. நீங்க தூங்கிகிட்டு இருக்கீங்க என கேட்டேன். ஊத்தட்டும் விடுய்யா.. என்றபடி மீண்டும் படுத்துக்கொண்டார் ஐயா நண்பா படம் சூப்பர் என்று கொண்டாடுறாங்க என்றேன் சரிய்யா என எழாமலேயே பதில் சொல்லி தூக்கத்தை தொடர்ந்தார் அதன் பின்னர் தீம் மியூசிக் சந்தோஷ் வந்து ஆளை புரட்ட அப்பொழுதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார்.
அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலையை செஞ்சுட்டோம் படம் நல்லா இருந்தாலும், இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணுமே பண்ண முடியாது வாழ்த்தினாலும் வறுத்தினாலும் ஏத்துக்கத்தான் வேணும் என்றார் அறிவியல், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத் எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி நல்லதும், கெட்டதும் நமக்குள் தான் என்று இயக்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ன பதிவிட்டார்.
அ.வினோத் என்கிற அரக்கன்… pic.twitter.com/qvLOzuS0zh
— இரா.சரவணன் (@erasaravanan) September 5, 2023