தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத இரு நட்சத்திரங்கள் என்றால் அஜித் மற்றும் விஜய் தான்.. இவர்கள் இருவரும் அண்மைகாலமாக வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகின்றனர் அந்த வகையில் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு இவர்களது திரைப்படம் வெளியாக உள்ளது.
அதுவும் நேருக்கு நேராக மோதுவதால் அஜித், விஜய் ரசிகர்கள் இந்த இரண்டு படங்களையும் பெரிய அளவில் எதிர்நோக்கி இருக்கின்றனர். படம் வெளிவந்து தான் மோதும் என்று பார்த்தால் படம் வெளிவருவதற்கு முன்பாகவே திரையரங்கை கைப்பற்ற தற்பொழுது இரண்டு படமும் மோதி கொள்கிறது. அஜித்தின் துணிவு திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவி நிறுவனம் தான் வெளியிடுகிறது.
இதனால் அஜித்தின் துணிவு திரைப்படத்திற்கு பெரும்பாலான திரையரங்குகள் கிடைக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்ட நிலையில் தற்போது அது கரெக்டாக நடந்து கொண்டும் இருக்கிறது தமிழகத்தில் மட்டுமே 70% திரையரங்குகளை துணிவு திரைப்படம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது குறிப்பாக சென்னை, தஞ்சாவூர், கோவை, திருச்சி போன்ற முக்கிய மாவட்டங்களில்..
அஜித்தின் துணிவு திரைப்படம் கைப்பற்றி விட்டதாம் மீதி இருக்கின்ற இடங்களிலும் உள்ளே புகுற உதயநிதி ஸ்டாலின் திட்டம் போட்டு இருப்பதாக தெரிய வருகிறது இப்படியே போனால் விஜயின் வாரிசு திரைப்படம் தமிழகத்தில் வெறும் 30% திரையரங்குகளே கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
இதனால் வசூல் ரீதியாகவும் வாரிசு திரைப்படத்திற்கு சிக்கல் வரும் ரசிகர்களும் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த பிரச்சனையை தடுக்க வாரிசு படக்குழுவும் திரையரங்குகளை கைப்பற்ற தற்பொழுது தீவிரம் காட்டிய வருகிறதாம்.. படம் வெளிவருவதற்கு முன்பாகவே இப்படி போட்டி போடுகின்றன வெளிவந்தால் என்ன நடக்குமோ என பலரும் கூறி வருகின்றனர்.