துணிவு தான் ஃபர்ஸ்ட்.. தள்ளிப் போகும் விஜயின் வாரிசு.? வெளிவந்த ஷாக்கிங் தகவல்

ajith and vijay
ajith and vijay

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தனது 61வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்துள்ளார் . படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீஸ் ஆக இருக்கிறது துணிவு திரைப்படம்.

முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை  மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில்  நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் மற்றும் இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி, யோகி பாபு என பல நட்சத்திர நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர்.

துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என பலரும் கூறி வந்த நிலையில் தற்போது இயக்குனர் ஹச். வினோத் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதாவது இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார் ஆனால் மங்காத்தா 2 போல இருக்காது வித்தியாசமான ஒரு படமாக இருக்கும் என கூறினார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அஜித்தின் துணிவு வாரிசு திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளிவந்துள்ளது இது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. வளர்ந்து வரும் நடிகர் மகத் விஜயின் வாரிசு.. அஜித்தின் துணிவு.. திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது..

துணிவு.. வாரிசு.. ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஒரே தேதியில் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறியிருந்தார் முதலில் துணிவு திரைப்படம் தான் ரிலீஸ் ஆகும் என்றும்.. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து தான் விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக கேள்விப்பட்டேன் என அவர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் வாரிசு படக்குழு என்னதான் செய்யப் போகிறது என்று.