உண்மை சம்பவத்தை படமாகும் “துணிவு” – அஜித்திற்கு இப்படி ஒரு கதாபாத்திரமா.?

ajith
ajith

நடிகர் அஜித்குமார் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஒருமுறை ஹச் வினோத்துடன் கைகோர்த்து தற்பொழுது தனது 61 வது திரைப்படமான துணிவு படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் எப்போதோ ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் படத்தின் பைனான்சியன்ஸ் காரணமாக படத்தின் ஷூட்டிங் தள்ளி கொண்டு போனது.

அதனால் சரியான தேதிக்கு படம் ரிலீஸ் ஆகாமல் தள்ளிக் கொண்டே போகிறது ஒரு வழியாக இறுதி கட்டப்பட பிடிப்பிற்காக பட குழு இப்பொழுதுதான் பாங்காங் சென்று இருக்கிறது. துணிவு படத்தில் அஜித்துடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரகனி, அஜய், மகாநதி சங்கர், யோகி பாபு மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இருந்து இதுவரை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இரண்டாவதாக ஒரு போஸ்டர் வெளிவந்துள்ளது இந்த இரண்டு போஸ்டருமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திழுத்துள்ளது இதனால் இந்த படத்தை பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆசைப்பட்டு வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு எப்படிப்பட்ட கதை என்பது குறித்து ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

அதாவது துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு உண்மை கொள்ளை சம்பவத்தை தான் படமாக எடுத்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள ஒரு பேங்கில் 13 பேர்  கொள்ளையடித்தனர். போலீஸ் வேடமிட்டு வங்கி ஊழியர்களை மிரட்டி 6 கோடி ரூபாய் கொள்ளை அடித்தனர்.

1987 ஆம் ஆண்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டனர் 30 வருடங்கள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு 9 பெயருக்கு தண்டனை வழங்கியது. இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கியமாக செயல்பட்டவர் லாப் சிங் தான். அந்த கதாபாத்திரத்தில் தான் நடிகர் அஜித் நடித்துள்ளாராம் அதுவும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. மங்காத்தா படத்திற்கு பிறகு இப்பொழுது இப்படி ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பதால் நிச்சயம் இந்த படமும் வெற்றி படமாக இருக்கும் என கூறப்படுகிறது.