வெளியான 3 நாட்களில் 100 கோடியை தாண்டிய துணிவு.! உச்சகட்ட சந்தோசத்தில் தயாரிப்பாளர்…

thunivu
thunivu

தமிழ் சினிமாவில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. நடிகர் அஜித் இந்த திரைப்படத்தில் ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்களுக்கு ஒரு நல்ல கருத்தை கூறி நடித்துள்ளார்.

இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் ஒரு பேங்கில் நடக்கக்கூடிய மோசடியை பற்றி தெள்ளத் தெளிவாக எடுத்து கூறும் ஒரு திரைப்படமாக அமைந்திருந்தாலும் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு திரைப்படத்துடன் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் வெளியாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று சளைத்தது இல்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டி போட்டுக் கொண்டு வருகிறது இதனை தொடர்ந்து துணிவு மற்றும் வாரிசு இரண்டு திரைப்படங்களும் வெளியாகி மூன்று நாட்கள் முடிவடைந்த நிலையில் துணிவு திரைப்படம் வாரிசை விட அதிக வசூலை ஈட்டி வருகிறது.

அந்த வகையில் துணிவு திரைப்படம் வெளியாகி மூன்று நாட்கள் முடிவில் இந்தியா முழுவதும் 100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் துணிவு திரைப்படம் 2023 ஆண்டில் நூறு கொடிக்கு மேல் வசலித்த முதல் திரைப்படமாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து அஜித் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் ஓரளவு கவனத்தை வென்ற இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ரசிகர்கள் கொண்டாட கூடிய திரைப்படத்தை உருவாக்குவாரா என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது.

இதை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் வருகின்ற ஜனவரி 17ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து ஏகே 62 திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. மேலும் விஜயின் தளபதி 67 திரைப்படமும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என கூறப்படுகிறது இதனால் மறுபடியும் அஜித், விஜய் மோத தயாராக இருக்கிறார்களா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது ஆனால் துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் வெளியான போது ஏற்பட்ட சில சங்கடங்களால் விஜய், அஜித் மறுபடியும் மோத மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.