தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தற்போது தங்களுடைய திரைப்படத்தின் மூலம் நீண்ட வருடங்களுக்கு பிறகு மோதிக் கொண்டு உள்ளனர். ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ஜி பி முத்து, சமுத்திரகனி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படம் வெளியாகி நேற்று ஒரு நாளில் மட்டும் 21 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை தொடர்ந்து நேற்று வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து துணிவு மற்றும் வாரிசு திரைப்படத்தின் மூலம் மோதி உள்ள அஜித் விஜய் திரைப்படத்தின் கலெக்ஷன் குறித்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் தேசிய அளவில் 21 கோடி முதல் 23 கோடி வரையில் வசூல் செய்துலதாக கூறப்படுகிறது. ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 21 கோடி என கூறப்படுகிறது இதனால் வாரிசு படத்தை விட துணிவு திரைப்படம் அதிகமாக வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இது ஒரு பொய்யான தகவல் விரைவில் துணிவு மற்றும் வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வாரிசு மற்றும் துணிவு திரைப்படத்தின் மூலம் மோதிக்கொண்ட அஜித் மற்றும் விஜய் இருவருமே அடுத்த படத்தின் மூலமும் மோத இருப்பதாக கூறப்படுகிறது.
தளபதி 67 மற்றும் ஏகே 62 படத்திற்கான படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ள நிலையில் தீபாவளிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விடும் எனவும் இந்த இரண்டு படங்களும் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.