தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். வாரிசு படத்துடன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் வெளியானது கிட்டத்தட்ட ஜில்லா மற்றும் வீரம் திரைப்படத்தின் பிறகு எட்டு வருடங்கள் கழித்து விஜய் அஜித் இருவருமே தற்போது இந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று மோதிக்கொண்டனர்.
அந்த வகையில் துணிவு மற்றும் வாரிசு இரண்டு படங்களும் ஜனவரி 11ஆம் தேதி ஒரே தினத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமில்லாமல் வசூலிலும் கடுமையாக போட்டி போட்டுக் கொண்டு வருகிறது இதில் துணிவு ஜெயிக்குமா? வாரிசு ஜெயிக்குமா? என்ற போட்டி நிலவி வருகிறது.
வாரிசு பாடத்தின் வசூல் நிலவரம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே இருக்கிறது இந்த நிலையில் ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படம் அதிக வசூல் லாபம் பார்த்து விட்டதாக தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது வாரிசு திரைப்படம் கேரளாவில் எதிர்பார்க்காத அளவிற்கு லாபம் பார்த்து விட்டது அது மட்டுமல்லாமல் இந்திய அளவிலும் வாரிசு படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது இந்த நிலையில் ஜனவரி 14ஆம் தேதி தெலுங்கில் வாரசுடு என்ற பெயரில் வாரிசு படம் வெளியானது. இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கு பகுதிகளில் வாரிசு படம் நல்ல வசூல் லாபம் பார்த்து வருகிறது.
இதனை தொடர்ந்து தனது மாமியார் நாடான இலங்கையில் வாரிசு படம் திரையிடப்பட்டுள்ளது பிரபல தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் இலங்கையில் வெளியிடப்பட்ட வாரிசு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது அந்த வகையில் இலங்கையில் மட்டும் இதுவரைக்கும் 700.000 பவுண்ட் வசூல் செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதனால் தயாரிப்பு நிறுவனம் உச்சகட்ட சந்தோஷத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.