வெளியான சில நிமிடங்களில் துணிவு சில்லா சில்லா நிகழ்த்திய சாதனை.! அனல் பறக்கும் புதிய அப்டேட்…

chilla-chilla
chilla-chilla

ஹெச் வினோத், அஜித், மற்றும் போனி கபூர் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கி உள்ள துணிவு திரைப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் அவர்கள் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேற்று (9.12.2022) வெள்ளி கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு துணிவு திரைப்படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு பக்கம் இந்த பாடல் காப்பியடிக்கப்பட்டது என்று ட்ரோல் செய்யப்பட்டாலும் ஒரு பக்கம் ரசிகர்களை திகட்ட திகட்ட கேட்ட ஆட வைத்திருக்கிறது  அந்த அளவிற்கு  ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒரு பாடலை கொடுத்துள்ளார் ஜிப்ரான்.

அதுமட்டுமல்லாமல் ஜிப்ரான் அவர்களுக்கு இந்த பாடல் ஐம்பதாவது பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் குரலுக்கு ஏற்றவாறு இசையில் பட்டையை கிளப்பியுள்ளார் ஜிப்ரான். அதுமட்டுமல்லாமல் இந்தப் படத்தில் சில பிக்பாஸ் பிரபலங்களும் நடித்துள்ளார்கள். அதாவது அமீர், பாவணி, சிபி, உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரகனி அவர்கள் நடித்து உள்ளார் மேலும் துணிவு படத்தின் விவரங்களை பட குழு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் நேற்று வெளியான துணிவு திரைப்படத்தின் சில்லா சில்லா பாடல் வெளியாகி சில நிமிடங்களில் மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் சில்லா சில்லா பாடல் வெளியாகி ஐந்து நிமிடத்தில்  100k பார்வையாளர்களை கடந்துள்ளது, பத்து நிமிடத்தில் 200k பார்வையாளர்களை கடந்துள்ளது, மேலும் 17 நிமிடத்தில் 300k பார்வையாளர்களை கடந்துள்ளது, மற்றும் 28 நிமிடத்தில் நான்கு லட்சம் பார்வையாளர்களையும், 45 நிமிடத்தில் 5 லட்சம் பார்வையாளர்களையும் கடந்து உள்ளது, தற்போது உள்ள நிலவரப்படி 13 மணி நேரத்தில் 7.3 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வருகிறது.