3 கோடி லாபம் பார்த்த துணிவு ஹிட்டா… 30 லட்சம் 40 லட்சம் லாபம் பார்த்த வாரிசு ஹிட்டா.! விலாசும் பிரபல நடிகர்

Thunivu
Thunivu

Thunivu and Varisu : தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரங்களாக பார்க்கப்படுவது அஜித் மற்றும் விஜய். இருவருமே வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து ஓடுகின்றனர் அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு அஜித்தின் துணிவு, விஜயின் வாரிசு படங்கள் வெளியாகின.

அஜித்தின் துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க  பேங்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டியது. மேலும்  சமூகத்திற்கு தேவையான சில கருத்துக்கள் நிறைந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி கரமாக ஓடியது இதனால் அந்த படத்தின் வசூலும் அதிகமாக அள்ளியது.

படம் ஒட்டுமொத்தமாக 230 கோடிக்கு மேல் வசூல் பார்த்தது. துணிவு பணத்தை எதிர்த்து வெளியான விஜயின் வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு குடும்ப சப்ஜெக்ட் படமாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று படம் ஓடியது இருப்பினும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் அள்ளியதாக கூறப்படுகிறது இரண்டு திரைப்படங்களுமே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அஜித் விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார் தளபதி விஜய் லியோ படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் பிரபல நடிகர் மீசை ராஜேந்திரன் சமீபத்திய பேட்டி ஒன்று துணிவு, வாரிசு படம் பற்றி பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. கோயம்புத்தூர் சைடில் விஜயின் வாரிசு படம் 11 கோடிக்கு வாங்கப்பட்டது.

ஆனால் படம் 11 கோடி  என்னுமோ தான் வசூல் செய்தது ஆனால் அஜித்தின் துணிவு திரைப்படம் 8 கோடிக்கு வாங்கப்பட்டது ஆனால் 11 கோடி வசூல் செய்தது. துணிவு படம் மூணு நாலு கோடி லாபம் பார்த்தது ஆனால் விஜயின் வாரிசு படம் 30 லட்சம் 40 லட்சம் தான் லாபம் அப்படி இருக்கையில் எந்த படம் ஹிட்ட என்று கேட்டார் அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.