தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் அஜித். தற்போது லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் நடிக்க இருக்கிறார்.. இந்த படத்தின் சூட்டிங் வருகின்ற அக்டோபர் 4ஆம் தேதி வெளிநாட்டில் தொடங்கப்பட இருக்கிறதாம்.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பதாக கூறப்படுகிறது.. இந்நிலையில் அஜித் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் துணிவு. ஹெச். வினோத் இயக்கியிருந்தார்.. துணிவு படம் வங்கியில் நடக்கும் பண மோசடி, அதனால் மக்கள் எவ்வாறு கஷ்டப்படுகின்றனர் என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக் கூறியது.
படத்தில் அஜித் வங்கியை குறி வைத்து அவரது ஆட்களுடன் அதனை கொள்ளை அடித்து அந்த பணத்தை மக்களுக்கு கொடுக்கும்படியான கதைகளம் இடம்பெற்று இருந்தது.. படத்தில் ஆக்சன் காட்சிகள் ஒவ்வொன்றும் வேற லெவலில் இருக்கும்.. இந்நிலையில் துணிவு படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சியில் அஜித் நடிக்கவே இல்லையாம்..
துணிவு படத்தில் சென்னை அண்ணா சாலையில் முகமூடி போட்டுக் கொண்டு அஜித் தன்னிடம் இருக்கும் பணத்தை மக்களிடம் அள்ளி கொடுக்கும்படியான ஒரு காட்சி படமாக்கப்பட்டது.. ஆனால் அந்தக் காட்சியில் அஜித்திற்கு பதில் வேறு ஒருவர்தான் முகமூடி போட்டுக் கொண்டு நடித்து இருந்தாராம்.. முகமூடி போட்டு இருந்ததால் அந்த காட்சியில் அஜித் தான் நடித்திருக்கிறார் என எல்லோரும் நினைத்தனர்..
ஆனால் அந்த காட்சி படமாக்கப்பட்ட அதே நாளில் அஜித் வெளிநாட்டில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியதன் மூலமே இது தெரிய வந்தது.. சில படங்களில் சண்டைக் காட்சிகளில் ஹீரோவிற்கு பதில் டூப் போட்டு நடிப்பது போலே, துணிவு படத்தில் அந்த முகமூடி காட்சியில் அஜித்திற்கு பதில் வேறு ஒருவர் டூப் போட்டு நடித்திருந்தார் என கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிவில்லை.