நந்தா கெட்டப்பில் மிரட்டும் பாபி சிம்ஹா.. ஆக்ஷன்க்கு பஞ்சம் இல்லாத “தக்ஸ் ட்ரைலர்”

கடந்த சில வருடங்களாக பலரும் புது புது அவதாரம் எடுக்கின்றனர் இசையமைப்பாளர்கள் ஹீரோவாக மாறுவது, இயக்குனர்கள் ஹீரோவாக நடிப்பது, ஹீரோ இயக்குனர் அவதாரம் எடுப்பது என சொல்லிக்கொண்டே போகலாம் அந்த வகையில் நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர்.

சமீபகாலமாக இயக்குனராக வேலை பார்த்து வருகிறார் முதலில் இவர் ஹே சினாமிகா என்ற படத்தை எடுத்து அறிமுகமானார் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற ஒரு படத்தின் ரீமேக்கை தமிழில் தற்போது இவர் எடுத்துள்ளார் அந்த படத்திற்கு குமரி மாவட்டத்தின் thugs என பெயர் வைத்துள்ளார்.

படத்தின் டிரைலர் அண்மையில் வெளியானது இதில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபி சிம்ஹா மற்றும் பாலிவுட் ஹீரோவான ஹிர்ருது ஹாருன் நடித்துள்ளார்.  மேலும் போலீஸ் அதிகாரியாக ஆர் கே சுரேஷ் நடித்துள்ளார். இவர்களைத் தவிர முனீஸ் காந்த், ரம்யா சங்கர், அனஸ்வரா ராஜன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்..

இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர் இந்த படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும் பொழுது இந்த படத்தில் கொஞ்சம் காதல் நிறைய ஆக்ஷன் தெரிந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த திரை படத்தில் போலீசுக்கும் கைதிகளுக்கும் நடக்கும் பிரச்சனையை முழுவதுமாக எடுத்துக்காட்டும் என கூறப்படுகிறது.

சில வருடங்களாக பாபி சிம்ஹா நடிக்கும் கதாபாத்திரங்கள் பெரிய அளவில் பேசப்படாத நிலையில் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்று தரும் என கூறப்படுகிறது. இதோ நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கிய குமரி மாவட்டத்தின் thugs திரைப்படத்தின் டிரைலர்..