சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் விக்ரம் இவர் 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், மீரா, புதிய மன்னர்கள் ,உல்லாசம் பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இத்தகைய படங்கள் மூலம் தனது நடிப்பை வளர்த்துக்கொண்டார் விக்ரம்.
அவர் 1999 ஆம் ஆண்டு சேது என்ற திரைப்படத்தில் நடித்து. நடிப்பு என்றால் என்னவென்று மற்ற நடிகர்களுக்கு விளக்கும் விளக்கும் வகையில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுபோல தனது சிறந்த நடிப்பின் மூலம் பல வெற்றிகளையும் குவித்தார் அதைவிட மேலாக தோல்விப் படங்களையும் கொடுத்தார் ஆனால் அவர் பல தோல்வி படங்களை கொடுத்து இருந்தாலும் அவரது நடிப்பில் குறை சொல்லாத அளவிற்கு தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
தனது சிறந்த நடிப்பின் மூலம் பல வெற்றி படங்களை கொடுத்தவர் அதிலும் குறிப்பாக பிதாமகன், அண்ணியன், ராவணன், தெய்வத்திருமகள், தாண்டவம், இருமுகன், கடாரம்கொண்டான் ,ஐ படங்களாகும் தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு அடுத்தபடியாக சிறந்த நடிகராக விளங்குபவர் நடிகர் விக்ரம் என்பது எவராலும் மறைக்க முடியாத உண்மையாகும்.
இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து கூறி வருகின்றனர். நடிகரும் அவரது மகனுமான த்ருவ் விக்ரம் அவர்கள் அப்பாவுக்காக வீடியோ ஒன்றையும் வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.அத்தகைய வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது இந்த வீடியோவை இதுவரை பல லட்சம் பேர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#Vikram #actor pic.twitter.com/JQM9K0Xc1b
— Tamil360Newz (@tamil360newz) April 17, 2020