ஐபிஎல் 15வது சீசன் வெகுவிரைவிலேயே தொடங்குகிறது அதற்கு முன்பாக மெகா ஏலம் நடைபெறுகிறது. இதுவரை 8 அணிகள் இருந்த நிலையில் புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த நடக்க உள்ள மெகா ஏலம் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களை இந்த இரண்டு அணிகளும் குறிவைத்து உள்ளது அந்த வகையில் சென்னையை சேர்ந்த சுட்டிகுழந்தை சென்னை ஐபிஎல் ஏலத்தில் எடுக்க சில அணிகள் போட்டி போடுவதாக தெரிகிறது. சாம் கரன் பஞ்சாப் கிங்ஸ், சென்னை ஆகிய பணிகளுக்காக இதுவரை விளையாண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 32 போட்டிகளில் 332 ரன்கள் எடுத்துள்ளார் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறந்த ஆல்ரவுண்டர் என்பதை ஒவ்வொரு தடவையும் நிரூபித்து வருகிறார். சென்னை அணி சாம் காரனை தற்போது ரிலீஸ் செய்து உள்ளது. அவரை தட்டி தூக்க கொல்கத்தா அணி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக அகமதாபாத் அணி இவரை குறி வைத்துள்ளதாகவும் புதிய அணியாக என்பதால் அவர்கள் நிச்சயம் வாங்க பார்த்து வருகிறதாம் முதலாவதாக சாம் கரன், தாகூர், ஹர்திக் பாண்டியா ஆகிய மூவரையும் ஏலத்தில் எடுக்க திட்டம் தீட்டி உள்ளதாம்.
மூன்றாவதாக டெல்லி கேப்பிடல் அணி தற்பொழுது மார்க்கஸ் ஸ்டோய்னிஸை ஏலத்தில் விட்டுவிட்டு சாம் காரனை தட்டி தூக்க ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளிவருகிறது. ஏனென்றால் ஸ்டோய்னிஸ் சரியாக விளையாடுவது இல்லை அதனால் அவருக்கு பதிலாக இவரையே அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன