இதுவரையிலும் தோல்வியை சந்திக்காத மூன்று தமிழ் இயக்குனர்கள்.! வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹெட் தான்..

direcctor
direcctor

தற்பொழுதெல்லாம் சினிமாவிற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது மேலும் சினிமா என்பது பலருடைய வாழ்வில் பெருந்துணையாக இருந்து வருகிறது அதாவது சினிமா துறையில் தான் லட்சக் கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள் இப்படிப்பட்ட நிலையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களும் உருவாகி வரும் நிலையில் தற்பொழுது தமிழ் சினிமாவில் இதுவரை பெரிதாக தோல்வியை சந்திக்காத இயக்குனர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதாவது ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதோ தோல்வி அடைவதோ அந்த இயக்குனர் கையில் தான் இருக்கிறது அதில் சில இயக்குனர்கள் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை தரும் திரைப்படங்களை இயக்கி தருவார்கள். அந்த வகையில் தங்களுடைய சினிமா கேரியேரில் பெரிதாக வசூல் ரீதியாக தோல்வியை சந்திக்காத மூன்று இயக்குனர்கள் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

லோகேஷ் கனகராஜ்: மூன்றாவது இடத்தில் யோகேஷ் கனகராஜ் இருக்கிறார். இவர் கைதி, மாநகரம், மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்களை இயக்கி உள்ளார் இந்த நான்கு திரைப்படங்களுமே வசூல் செய்தியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து திரைப்படமாகும். முக்கியமாக கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. இதை அடுத்து தற்பொழுது நடிகர் தளபதியை வைத்து தளபதி 67 திரைப்படத்தினை இயக்கம் இருக்கிறார் இந்த திரைப்படமும் நல்ல வெற்றினை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன்: இரண்டாவது இடத்தில் இயக்குனர் வெற்றிமாறன் கிட்டத்தட்ட ஆறு திரைப்படங்களை இயக்கியுள்ளார் அதில் தனுஷை வைத்து மட்டுமே ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். இந்த ஐந்து திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படமாகும் இதனை அடுத்து தற்பொழுது இவர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து விடுதலை திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

சங்கர்: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சங்கர் தான் முதலிடத்தில் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் 27 திரைப்படங்களுக்கு மேல் இயக்கியிருக்கும் சங்கர் தொடர்ந்து வெற்றியை கண்டு வருகிறார் ஒரு சில திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்றிருந்தாலும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்றுள்ளது.