கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரி, மற்றும் பல வாளகங்கள் மூடப்பட்ட நிலையில் மதுக் கடைகளும் மூடப்பட்டன இதனால் மக்கள் மற்றும் மது பிரியர்கள் தனது வாழ்வாதாரத்தை இழந்தனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தற்போது மது பிரியர்களாக தள்ளப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இன்று மது கடைகள் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது இதனால் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இருப்பினும் தமிழக அரசு இந்த அறிவிப்பை அறிவித்தது இதையொட்டி இன்று காலையிலிருந்தே மது பிரியர்கள் சமூக இடைவெளி விட்டு வாங்கி செல்கின்றனர் ஒருசிலர் அதனை கொண்டாடும் வகையில் கேக், வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர்.தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு தளர்வு பின் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் ஐந்து கடைகளைத் தவிர மற்ற 233 டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது அதில் திருப்பூர் எம்எஸ் நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மது பிரியர்கள் பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இதனை பொதுமக்களிடத்தில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடிக்க கொண்டாடியதால் செல்ல வேல், அருண், சரவணன் மூன்று பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.இவர்களைப் போன்று பல மாவட்டங்களில் மது பிரியர்கள் கடை முன்பு கும்பிடும், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மற்றும் பாட்டு பாடியும் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வந்தாலும் சமூக இடைவெளி விட்டு பின்பற்றி வாங்கி செல்கின்றனர் மது பிரியர்கள்