நடிகர் விஜய் தற்பொழுது கோலிவுட்டில் பிரபல நடிகராக தொடர்ந்து இவருடைய திரைப்படங்கள் பாக்ஸ் ஆபீஸ் நல்ல வசூலை பெற்று வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் விஜய்யின் ஏராளமான திரைப்படங்கள் படம் தோல்வியை அடைந்திருக்கிறது. அப்படி இவர் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களோடு போட்டி போட்டு தோற்ற படங்களும் உள்ளது.
நடிகர் விஜய் கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியான பிறகுதான் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. அப்படி 90 காலகட்டத்தில் பிரபல நடிகர் பிரசாந்த் உடன் போட்டி போட்டு நிறைய படங்களில் நேருக்கு நேர் மோதி விஜயின் படங்கள் தோல்வியினை சந்தித்திருக்கிறது இவ்வாறு விஜயின் தோல்வியை சந்தித்த படங்கள் குறித்து பார்க்கலாம்.
நினைத்தேன் வந்தாய்: இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரம்பா மற்றும் தேவயானி இருவரும் நடித்திருந்த நிலையில் பெரும் பொருட்ச அளவில் உருவானது. இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் முன்னணி நடிகர்களும் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகும் நேரத்தில் தான் நடிகர் பிரசாந்தின் ஜீன்ஸ் படமும் வெளியானது. இந்த படமும் அதிக பொருட்செலவில் இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார் இவ்வாறு பிரசாந்தின் ஜீன்ஸ் மற்றும் விஜயின் நினைத்தேன் வந்தாய் இரண்டு படங்களும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது அதிக வசூல் செய்தது ஜீன்ஸ் தான் நினைத்தேன் வந்தாய் படம் பெரும் தோல்வியை சந்தித்தது.
நிலவே வா: 1998ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படம் மதம் மாறி காதலித்து வரும் காதலர்களை வைத்தும் கடைசியில் எப்படி சேர்கிறார்கள் என்பதனை மையமாக வைத்தும் உருவாகியிருந்தது. இந்த படத்திற்கும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை இந்த படம் ரிலீஸ்சான அதே நேரத்தில் தான் பிரசாந்தின் கண்ணெதிரே தோன்றினாள் என்ற படம் வெளியானது. இவ்வாறு இந்த இரண்டு திரைப்படங்களுமே காதலினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்த நிலையில் விஜயின் நிலவே வா படம் தோல்வியினை சந்தித்தது.
மின்சார கண்ணா: 1999ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படத்தில் முன்னணி நடிகையான குஷ்பூ, மோனிகா, ரம்பா போன்ற நடிகைகள் நடித்திருந்தார்கள். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை இந்த படம் ரிலீசான அதே நேரத்தில் தான் நடிகர் பிரசாந்தின் ஜோடி திரைப்படம் வெளியாகி இருந்தது.
இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்த நிலையில் காதலை மையமாக உருவாக்கியிருந்த இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருந்தது. இவ்வாறு தற்பொழுது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக நடிகர் விஜய் வலம் வந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பிரசாந்துடன் போட்டி போட்ட நிறைய படங்கள் தோல்வியை சந்தித்துள்ளது.