நடிகர் அஜித்குமார் அண்மை காலமாக தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் வலிமை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தது ஒரு பிரம்மாண்ட வெற்றி கொடுக்க மீண்டும் ஒருமுறை ஹச். வினோத் உடன் இணைந்து தனது 61 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்
இந்த படம் முழுக்க முழுக்க பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாகுவதால் இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என தெரிய வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், இளம் நடிகர் வீரா, சமுத்திரக்கனி மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்திற்காக நடிகர் அஜித் சுமார் 20 இலிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து வருவதாக கூறப்படுகிறது முதல் கட்ட சூட்டிங் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கப்பட இருக்கிறது இது இப்படி இருக்க அஜித் பற்றிய செய்திகள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த வகையில் நடிகர் அஜித்குமார் தனது திரை பயணத்தில் பல முக்கிய திரைப்படங்களை மிஸ் செய்துள்ளார் அதில் குறிப்பாக மூன்று சூப்பர் ஹிட் படங்களை அவர் தவற விட்டு உள்ளார் அந்த படம் என்னென்ன என்பது குறித்து தற்பொழுது விலாவாரியாக பார்ப்போம்.
1. விஜய் – சூர்யா நடிப்பில் உருவான நேருக்கு நேர் திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது அஜித் தானாம். ஆனால் சில காரணங்களால் அவர் விலக அந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடித்தார். 2. பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த நந்தா திரைப்படத்தின் கதையை அஜித்திடம் தான் கூறியுள்ளார் ஆனால் அவர் முழு கதையை சொல்லாததால் அஜித் இந்த படத்தில் இருந்து விலக பின் சூர்யா நடித்தார்.
3. ஏ ஆர் முருகதாஸ் கஜினி திரைப்படத்தின் கதையை முதலில் அஜித்திற்காக உருவாக்கியுள்ளார் ஆனால் இரண்டாவது பாதியில் மொட்டை அடித்து நடிப்பது போல சீன் இருந்ததால் அஜித் அந்தப் படத்தை மறுக்க பின் சூர்யா இந்த படத்தில் நடித்தார்.