தமிழ் சினிமா உலகில் இளம் இயக்குனர்கள் தொடங்கி முன்னணி இயக்குனர்கள் பலரும் கமர்ஷியல் கலந்த படத்தை கொடுத்து பிரபலமடைந்து நன்றாகவே காசு பார்த்து வருகின்றனர் ஆனால் இதில் இருந்து முற்றிலுமாக மாறுபட்டு நிற்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் படங்கள் விருதுகளை வாங்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே பார்த்து பார்த்து ஒவ்வொரு படத்தையும் எடுக்கிறார்.
மேலும் இவர் ஒவ்வொரு படம் எடுக்கும் போதும் அதிக நேரம் எடுத்துக் கொள்வது இவரது வழக்கம் ஏனென்றால் ஒவ்வொரு சீனும் மக்கள் மத்தியிலும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என நினைக்க கூடியவர் அப்படித்தான் இவர் இதுவரை எடுத்த படங்கள் இருந்து வந்துள்ளன.
படத்தின் கதைப்படி நடிகர் நடிகைகள் நடிக்க வேண்டும் அதற்காக என்ன வேண்டுமானாலும் தயங்காமல் பாலா செய்துவிடுவார் அப்படிப்பட்ட மனுஷன் தான் அதை அவரது படங்களில் கூட நீங்கள் பார்த்திருக்க முடியும். இயக்குனர் பாலாவின் முதல் படம் சேது இந்த படத்தில் விக்ரம் நடித்து மிரட்டியிருப்பார்.
ஆனால் உண்மையில் சொல்லப்போனால் இந்த படத்தில் முதலில் நடிக்க வேண்டிய நடிகர்களே வேறு ஒருவர் தான் இந்த படத்தில் விக்ரமுக்கு முன்பு 3 நடிகர்கள் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் பாலாவின் நெருங்கிய நண்பரான விக்னேஷ் சேது படத்தில் நடிக்க இருந்ததாக கூறப்படுகிறது ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடுகள் காரணமாக விக்னேஷ் நடிக்க முடியாமல் போனதாம்.
அவரைத் தொடர்ந்து சேது படத்தில் அடுத்ததாக நடிக்க கமிட்டான நடிகர் தான் முரளி. அவரைத் தொடர்ந்து மூன்றாவதாக இந்த படத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர் தான் ஜேடி சக்கரவர்த்தி இவரும் சில காரணங்களால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தாராம். ஜேடி சக்கரவர்த்தி சமர், அரிமா நம்பி போன்ற படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
இவரும் சேது படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்தார் அதன்பின் ஒரு வழியாகத்தான் நடிகர் விக்ரம் இந்த படத்தின் கதையை தேர்வு செய்து நடித்ததாக கூறப்படுகிறது. கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் கன கச்சிதமாக நடித்து தனக்கு ஒரு திருப்புமுனை படமாக மாற்றி கொண்டார். மேலும் நடிகர் விக்ரமுக்கு சேது படத்திற்கு பிறகு ஏகப்பட்ட வாய்ப்புகள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.