அதிக சம்பளம் வாங்கும் மூன்று தமிழ் நடிகர்கள் – லிஸ்ட்டில் இடம்பெற தவறிய அஜித்.?

rajini
rajini

தமிழ் சினிமா உலகில் அண்மைக்காலமாக பிரம்மாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து வெற்றி பெறுகின்றன அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் நான்கு வருடங்கள் கழித்து லோகேஷ் கனகராஜ் சொன்ன விக்ரம் படத்தில் நடித்தார் இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருந்ததால் கமல் இந்த படத்தை துணிந்து தயாரித்தார் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரம்மாண்டமான வசூலை அள்ளியது.

உலகம் முழுவதும் விக்ரம் திரைப்படம் சுமார் 420 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது இதனை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார். இப்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் வருடத்திற்கு ஒரு படத்தையாவது சிறப்பான முறையில் கொடுக்க ஆசைப்படுகின்றனர்.

சினிமா உலகில் வெற்றியை கொடுக்கும் ஒவ்வொரு நடிகரும் அடுத்த படத்தில் நடிக்கும் போது தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி நடிக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் யார் யார் என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட் கிடைத்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.

உலகநாயகன் கமலஹாசன் விக்ரம் திரைப்படத்திற்காக சுமார் 50 கோடி சம்பளமாக வாங்கியதாக சொல்லப்படுகிறது ஆனால் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தில் நடிப்பதற்கு சம்பளமாக 130 கோடி கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி விஜய் வாரிசு திரைப்படத்திற்காக சுமார் 120 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்.

அதைவிட அடுத்த படத்திற்கு இன்னும் பத்து கோடி அதிகமாக உயர்த்தி 130 கோடி கேட்க வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மூன்றாவதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்காக சுமார் 80 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது இவர் கடைசியாக அண்ணாத்த படத்திற்காக 118 கோடி வாங்கி இருந்தாலும் அந்த படம் தோல்வி படமாக அமைந்த காரணத்தினால் இந்த படத்தில் சம்பளம் கம்மியாக வாங்குவதாக சொல்லப்படுகிறது.