சினிமா உலகில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டாலே போதும் அந்த இயக்குனர் மிகப்பெரிய ஒரு இயக்குனர் என்று நினைத்துக்கொண்டு கெத்து காட்டுவது வழக்கம் ஆனால் இளமை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து டாப் ஹீரோக்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து.
வெற்றியை நோக்கி ஓடிக்கொண்டே இருந்தாலும் பெரிய இயக்குனர் என்றும் அலட்டிக்கொள்ளாமல் சாதாரணமாக இருப்பதால் ஹீரோக்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிடித்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் மாறி உள்ளார் இதுவரை மாநகரம், கைதி, மாஸ்டர் இப்பொழுது விக்ரம் என நான்கு சூப்பர் ஹிட்.
படங்களை கொடுத்து வெற்றிகண்டு இருந்த நிலையும் அடக்கமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. கமலின் விக்ரம் திரைப்படம் வெறும் நான்கு நாட்களில் மட்டுமே 150 கோடியை அள்ளி புதிய சாதனை கண்டுள்ளது இதனால் லோகேஷ் மார்க்கெட்டும் கிடுகிடுவென உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் திரைப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் மூன்றாவது பாகத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது இதை மேடையிலேயே ஒரு தடவை கமலஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தையும் எடுக்க திட்டமிட்டுள்ளார் இந்த இரண்டு படங்கள்தான் இருக்கிறது என்று பார்த்தால் மற்றொரு படத்திலும் இவர் இணைய உள்ளார்.
கார்த்தியை வைத்து கைதி படத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை அப்பொழுது சில காட்சிகள் எடுத்து உள்ளார் இதனால் கைதி இரண்டாவது பாகமும் இயக்குவது உறுதி. பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் அடுத்த மூன்று படங்களை கையில் வைத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.