தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர்களாக திகழ்ந்து வரும் வெற்றி மாறன், பா ரஞ்சித், மற்றும் வெங்கட் பிரபு, ஆகிய மூன்று இயக்குனர்களும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படம் மற்றும் தமிழ் படம் 2 படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர் அமுதன் இவர் தற்போது விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்த நிலையில் இப்படத்தின் டீசர் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளதாக பட குழு அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் பிரபல இயக்குனரான வெற்றிமாறன், பா ரஞ்சித், மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் நடிக்க உள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் ரம்யா நம்பிசன், மற்றும் நந்திதா ஸ்வேதா, மகிமா நம்பியார் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பா ரஞ்சித், வெற்றிமாறன், வெங்கட் பிரபு, ஆகிய மூவரும் வரக்கூடிய இந்த படத்தின் காட்சியின் டீசர் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஒரே படத்தில் மூன்று இயக்குனர்கள் கூட்டணியில் உருவாக உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது அது மட்டுமல்லாமல் இந்த படத்தின் டீசரை பார்க்க ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதோ அவர் பதிவிட்ட ட்விட்…
. @csamudhan இயக்கத்தில்
நண்பர்கள் @VetriMaaran, @vp_offl & @beemji சிறப்பு தோற்றத்தில் #ரத்தம் #rathamteaser டிசம்பர் 5 மாலை 5 மணிக்கு release ஆகிறது☄️பாசப்பறவைகள் கீழை📺⚒💣🔥⬇️ pic.twitter.com/byll8BdLEG
— vijayantony (@vijayantony) December 2, 2022