தங்களுடைய அழகான சிரிப்பினால் ரசிகர்களால் புன்னகை அரசி என அழைக்கப்பட்ட மூன்று தலைமுறை நடிகைகள்.!

சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் அனைவருக்கும் அவர்கள் திறமைகளை வைத்து புரட்சி புயல், நடிகர் திலகம்,காதல் மன்னன், சாக்லேட் பாய், சூப்பர் ஸ்டார், டாப் ஸ்டார், இளைய தளபதி, வைகை புயல் என பல பெயர்கள் தமிழ் கதாநாயகர்களுக்கு உண்டு இன்னும் சில பிரபலங்களின் பெயரின் முன்பு அடைமொழி வைத்து வருகிறார்கள் அந்த வகையில் புன்னகை அரசி என்னும் பட்டத்தை பெற்று அடுத்த இரண்டு தலைமுறைகளை சேர்த்துள்ளார்கள்.

கே ஆர் விஜயா: 1963 ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமானவர் மேலும் இவருடைய சிறந்த நடிப்பு திறமையினால் தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். எம்ஜிஆர்,சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், ரவிச்சந்திரன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து மேலும் இவர் தான் தமிழ் சினிமாவின் முதல் புன்னகை அரசி.

பானுப்பிரியா: என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் 2001ஆம் ஆண்டு கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்ற பட்டத்துடன் இருந்து வந்தார் பிறகு திருமணம் செய்து கொண்ட பிறகும் தனக்கென இருந்த ஒரு அடையாளத்தை உருவாக்கி இருந்தார். சிறந்த நடிகை என மாநில விருதும் வாங்கியுள்ளார்.

சினேகா: தற்பொழுது இருந்து வரும் இளம் புன்னகை அரசி இவர் தான் இவர் 2011ஆம் ஆண்டு பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வந்த இவர் சமீப காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்த வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த தம்பதியினர்கள் பல சமூக சேவைகளை செய்து வருகின்றனர் அந்த வகையில் டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது இரண்டு லட்சம் நிதி உதவியாக கொடுத்தனர் இது போன்ற பல உதவிகளை கொடுத்து வருகிறார்கள்.

இந்த மூன்று நடிகைகளும் கவர்ச்சியை என்பதை கையில் எடுக்காமல் தன்னுடைய சிறந்த நடிப்பினாலும், சிரிப்பினால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டு தற்பொழுது சினிமாவில் தங்களுக்கு என்ன ஒரு அந்தஸ்தை பிடித்துள்ளார்கள்.