மூன்று நாள் முடிவில் “விக்ரம் படம்” – தமிழகத்தில் மட்டும் அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

vikram
vikram

நடிப்புக்கு பெயர் போன உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவில் உத்தமவில்லன் விஸ்வரூபம் 2 ஆகிய படங்களுக்கு பிறகு அரசியல், தொழில் நிறுவனம், பிக்பாஸ் போன்ற பலவற்றிலும் கவனம் செலுத்தி வந்ததால் படங்களில் தொடர்ந்து அவரால் நடிக்க முடியாமல் போனது.

பின்பு நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜய், கார்த்தி போன்றவர்களை வைத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து. வந்த இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலஹாசனுக்கு கதை கூற அந்த கதை கமலுக்கு பிடித்துப்போக விக்ரம் என்னும் படத்தை உருவாக்கினார்.

இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலுடைய தீவிர ரசிகர் அதனால் லோகேஷ் கமலுக்காக பார்த்து பார்த்து கதையை செதுக்கி உள்ளார். இந்த படம் உருவாகி வந்த நிலையிலே ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஏனென்றால் இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து விஜய்சேதுபதி, சூர்யா, பகத் பாசில் போன்ற பல முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர்.

அதனால் படம் ஒரு மிக ஆக்ஷன் படமாக உருவாகி வந்த நிலையில் கடந்த ஜூன் 3ஆம்  தேதியன்று தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற பல மொழிகளில் விக்ரம் படம் வெளியாகியது. படம் வெளிவந்து தமிழ்நாட்டை தவிர கேரளா அமெரிக்கா ஆந்திரா போன்ற பல இடங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

விக்ரம் படம் உலக அளவில் முதல் மற்றும் இரண்டாவது நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டியுள்ளது. இந்த நிலையில் விக்ரம் படம் மூன்று நாள் முடிவில் தமிழகத்தில் மட்டும் 65 கோடி வசூலில் சாதனை படைத்துள்ளது. இதனால் விக்ரம் படம் தமிழகத்தில் கேஜிஎஃப் பாகுபலி போன்ற பிரம்மாண்ட படங்களின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.