தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் துணிவு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார் மேலும் துணிவு திரைப்படம் உண்மையாக நடந்த வங்கி கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்த உருவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த படம் பொங்கல் அன்று வெளியாக இருப்பதாகவும் செய்தி கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை.
தற்பொழுது துணிவு படத்தில் விஜய் டிவி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கு பெற்று டைட்டில் வின்னராக வெற்றி பெற்றவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தற்பொழுது அமீர், பாவனி மற்றும் சிபி மூவருக்கும் துணிவு படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாம் எனவே துணிவு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக இவர்கள் மூவரும் விமானத்தில் சென்று உள்ளார்கள் அப்பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பாவனி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிபி பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அமீர் பாவனி இருவர்களுக்கும் தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது மேலும் அமீர் பாவனியை தொடர்ந்து துரத்தி துரத்தி காதலித்து வந்த நிலையில் தற்பொழுது பாவனி அமிரின் காதலுக்கு பச்சை கொடி காட்டியுள்ளார் மேலும் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது.