தமிழ் சினிமாவில் உள்ள இசையமைப்பாளர்கள் இது போன்ற ஒரு அம்மா சென்டிமென்ட் சாங்கை தற்போது நினைத்தாலும் கொடுக்க முடியுமா என்றால் தெரியாது அப்படி ரசிகர்களின் கண்கலங்க வைத்த மூன்று அம்மா பாடல்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பாடல்களை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.
எஸ் ஜே சூர்யா இயக்கி தயாரித்து நடித்து வெளியான திரைப்படம் “நியூ” இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் சிம்ரன், தேவயானி, கிரண், உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள “காலையில் தினமும் கண் விழித்தால்” என்ற அம்மா பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
இயக்குனர் வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த திரைப்படம் “வேலையில்லா பட்டதாரி”. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரையறுப்பை பெற்றது. மேலும் முதல் பாகத்தில் அனிருத் இசையில் வெளியாகி ரசிகர்களை மெய் உருக செய்த பாடலான “அம்மா அம்மா” பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இரண்டாவது இடத்தில் உள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள “வியாபாரி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவுடன் இணைந்து தமன்னா, பிரகாஷ் ராஜ், நமீதா, மாளவிகா, வடிவேலு, சந்தானம், சீதா, நாசர், உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் சூர்யா அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவா இசையில் ஹரிஹரன் பாடிய “ஆசைப்பட்ட எல்லாத்தையும்” என்ற அம்மா பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து முதல் இடத்தில் உள்ளது.
இந்த மூன்று பாடல்களை இப்போது நினைத்தால் கூட அவர்களால் இந்த பாடலை உருவாக்க முடியாது.