விஜய்யின் படத்தில் சைட் ரோலில் நடித்து கவினுக்கு ஜோடியான மூன்று நடிகைகள்.! யார் யார் தெரியுமா.?

kavin
kavin

தளபதி விஜய் திரைப்படத்தில் சைடு ரோலில் நடித்து பிறகு அடுத்தடுத்து கதாநாயகிகளாக கவின் திரைப்படத்தில் நடித்து மிரட்டி இருக்கும் நடிகைகள் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் கடைசியாக இவருடைய நடிப்பில் வாரிசு திரைப்படம் வெளியான நிலையில் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றினை கண்டது. இதனை அடுத்து தற்பொழுது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் எனும் சில மாதங்களில் முடியே இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தினை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இவ்வாறு அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் நடிகர் விஜயின் திரைப்படத்தில் ஏராளமான நடிகைகள் நடித்து விட வேண்டும் என ஆசைப்படுவது வழக்கம்.

அப்படி சைடு ரோலில் வாய்ப்பு கிடைத்தால் கூட நடித்து வருபவர்கள் இருந்து வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யின் படங்களில் சைடு ரோலில் நடித்து பிரபலமாகி பிறகு கவின் திரைப்படங்கள் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்கள் சிலர் உள்ளனர்.

ரேபா மோனிகா ஜான்: இவர் விஜய் உடன் பிகில் திரைப்படத்தில் சைடு ரோலில் நடித்திருந்தார். இதன் பிறகு கவினுக்கு ஜோடியாக ஆகாஷ் வாணி என்ற வெப் சீரியலில் ஹீரோயினாக நடித்திருப்பார்.

akash-vaani
akash-vaani

அமிர்தா ஐயர்: அதே விஜய்யின் பிகில் திரைப்படத்தில் தென்றல் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமானவர்தான் அமிர்தா ஐயர் இவரும் இதனை அடுத்து கவினுக்கு ஜோடியாக லிப்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

lift-movie
lift-movie

அபர்ணா தாஸ்: விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த பிரபலமான அமிர்தா தாஸ் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படத்தில் ஹீரோயினாக நடித்து கலக்கியிருந்தார்.

dada
dada