மாரிமுத்துவின் புதிய இல்லத்தை திறந்து வைக்கும் மூன்று நடிகர்கள்.! இதுதான் அவருடைய கடைசி ஆசையாம்

G. Marimuth News
G. Marimuth News

Marimuthu new house : இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து அண்மையில் டப்பிங் பேசும்போது மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எழுதினார். இவர் முதலில் வெள்ளி திரையில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் தான் இளம் இயக்குனர்களுக்கு உதவி இயக்குனராக இருந்துள்ளார் படிப்படியாக தனது திறமையை கற்றுக் கொண்டார்.

இதற்கிடையில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தார். அந்த வகையில் அஜித்தின் வாலி படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். கடைசியாக கூட ரஜினியின் ஜெயிலர் படத்தில்  வில்லனுக்கு ஆலோசனை சொல்லும் ஒரு நபராக நடித்து மக்கள் மத்தியில் கைதட்டல் வாங்கினார்.

அடுத்து சூர்யாவின் கங்குவா, கமலின் இந்தியன் 2 படங்களிலும் நடித்துள்ளார் ஒரு நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களை இயக்கி உள்ளார். இப்படி வெள்ளி திரையில் பிஸியான ஓடிய ஓடிய மாரிமுத்து சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் இடம் பிடித்தார்.

அந்த சீரியலை நம்பர் ஒன் இடத்திற்கு அழைத்துச் சென்றார். இப்படி சின்னதுரை வெள்ளி திரையில் இரண்டிலும் நல்ல காசு பார்த்து வந்ததால் ஒரு புதிய வீடை கட்டினார் மேலும் தனது மகன் மகள்களை நன்றாக படிக்க வைத்து அவர்களை நல்ல நிலைமையில் ஆக்கினார்.

ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்ட மாரிமுத்து இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக நல்ல இடத்திற்கு வந்தார் இந்த நிலையில் தான்  டப்பிங் பேசும்போது மாரடைப்பு ஏற்பட காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார் இருப்பினும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை அவருடைய இறுதி சடங்கு அவரது சொந்த ஊரில் செய்து அடக்கம் பண்ணினார்.

sivakumar
sivakumar

மாரிமுத்து சொந்தமாக வீடு கட்டி வந்தார். அந்த வீட்டை திறந்து வைக்க சிவகுமார், அவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர்கள் வரவேண்டும் என ஆசை பட்டார். நிச்சயம் மூன்று பேரும் வந்து மாரிமுத்துவின் ஆசையை நிறைவேற்றுவார்கள் என கூறுகின்றனர். மாரிமுத்துவின் அந்த புதிய வீட்டின் மதிப்பு மட்டுமே 1.5 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.