ரஜினியின் இந்த மூன்று சாதனைகளை முறியடிக்க முடியாமல் திணறும் விஜய், அஜித்.! இதனால்தான் சூப்பர் ஸ்டார்..

ajith kumar
ajith kumar

Actor Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பலவற்றிலும் சாதனை படைத்து வருகிறார். அப்படி சமீப காலங்களாக முன்னணி நடிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு போட்டி போட்டுக் கொள்கின்றனர் முக்கியமாக விஜயை குறி வைத்து பலரும் தாக்கி வரும் நிலையில் எதனால் ரஜினியை முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நெருங்க முடியாது என்பது குறித்து பார்க்கலாம்.

நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தின் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயிலர் படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது தற்பொழுது இந்த படத்தின் முன்பதிவுகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதற்கிடையில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சன் ப்ரிக்சஸ் நிறுவனர் கலாநிதி மாறன் ரஜினிகாந்த் பற்றி பேசுகையில் இவர் ரெக்கார்ட் பிரேக்கர் அல்ல ரெக்கார்ட் மேக்கர் என கூறியிருந்தார் அப்படி ரஜினிகாந்த் படைத்த சாதனைகள் பற்றியும் பேசி இருந்தார்.

1. தமிழ் சினிமாவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் படைக்கும் திரைப்படங்களில் லிஸ்டில் முதலிடத்தில் ரஜினிகாந்தின் 2.o திரைப்படம் இடம்பெற்றுள்ளது. 2.o படம் ரூபாய் 615 கோடி வசூல் செய்தது கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான 2.o படத்தின் சாதனையை இதுவரையிலும் வேறு எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை. இவ்வாறு இந்த வசூலை ரஜினி, விஜய்யால் நெருங்கவே முடியவில்லை.

2. தமிழ் சினிமாவிலேயே அதிக நாள் திரையரங்குகள் ஓடி சாதனை படைத்த திரைப்படங்கள் என்றால் அது ரஜினிகாந்து டையது மட்டுமே. இவருடைய நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகிய பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற திரைப்படமான சந்திரமுகி. சந்திரமுகி அதிக நாள் ஓடிய மொத்தம் 890 நாட்கள் ஓடி சாதனை படைத்த நிலையில் அதன் பிறகு சமீப காலங்களாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் 100 நாட்களை தாண்டுவதே மிகவும் கடினமாக இருந்து வருகிறது.

3. இவ்வாறு இப்படிப்பட்ட ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டுகளிலும் அதிக மவுசு இருந்து வருகிறது. முக்கியமாக ஜப்பானில் இவருக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறார்கள் மேலும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய சாதனையை படைத்தது. அப்படி அந்த நாட்டில் மட்டுமே ரூபாய் 23.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தார். ரஜினிகாந்த் இவ்வாறு இந்த மூன்று சாதனையை தமிழ் சினிமாவின் எந்த நடிகராலும் முறியடிக்க முடியவில்லை.