thrawpathi director mohan direct another movie first look poster release: பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தை இயக்கிய தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஜி மோகன், இவர் இயக்கத்தில் அடுத்ததாக திரவுபதி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் பெரிய நடிகர்கள் கிடையாது பெரிய நட்சத்திரங்கள் கிடையாது இயக்குனரும் அனுபவமில்லாத இயக்குனர்தான், இருந்தாலும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. திரவுபதி திரைப்படத்தில் நடிகராக அஜித்தின் மைத்துனருமான ரிச்சர்ட் நடித்திருந்தார்.
ரிச்சர்ட் சினிமாவில் அஞ்சலி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து 2002ஆம் ஆண்டு காதல் வைரஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.அதன் பின்பே கிரிவலம், நாளை, யோகா தமிழகம், போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் அஜீத்தின் மைத்துனராக இருந்தாலும் இன்னும் சினிமாவில் பெரிய அளவில் புகழ் பெறவில்லை. அதே போல் ஒரு நிலையான அங்கீகாரமும் கிடைக்கவில்லை, ஒரு சில திரைப்படங்கள் நடித்துவிட்டு நான்காண்டுகள் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். பின்பு நான்கு வருடத்திற்கு பிறகு தான் திரவுபதி திரைப்படத்தில் நடித்திருந்தார்.
திரௌபதி திரைப்படம் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் வகையில் உருவாக்கியிருந்தது, அதுமட்டுமில்லாமல் பதிவு திருமணம் பற்றி சுட்டிக் காட்டி இருந்தார்கள், மேலும் ஜாதி பேரில் நடக்கும் அநியாயங்களை கூறியிருத்திருந்தார்கள், பெரிய பட்ஜெட்டில் உருவாகவில்லை என்றாலும் இந்த திரைப்படம் நல்ல வசூலை பெற்று கொடுத்தது.
படத்தை குடும்பங்களுடன் பலரும் கண்டு களித்தார்கள் இந்த நிலையில் மோகன் ஒரு சமூகத்தினரை இழிவாக காட்டி விட்டார் என சர்ச்சை எழுந்தது, இந்த நிலையில் திரவுபதி இயக்குனர் அடுத்ததாக மீண்டும் ரிச்சர்டை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ருத்ரதாண்டவம் என பெயர் வைத்துள்ளார்கள். ஆயுத பூஜையை முன்னிட்டு இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு உள்ளார்கள்.
திரவுபதி திரைப்படத்தைப் போல் ருத்ரதாண்டவம் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.