அரண்மனை மூன்றாம் பாகத்தை திரையரங்கில் பார்க்காதவர்கள் – பிரபல OTT தளத்தில் வந்துடுச்சி போய் பாருங்க..

ARANMANAI 3
ARANMANAI 3

தமிழ்சினிமாவில் பல்வேறு வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து அசத்தி வருபவர் நடிகர் ஆர்யா.ஆரம்ப காலகட்டத்தில் இவர் காதல், ஆக்ஷன் போன்ற படங்களை கொடுத்து வந்த இவர் திடீரென தனது ரூட்டை மாற்றி தற்பொழுது பேய் மற்றும் வித்தியாசமான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த திரைப்படங்களும் இவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்து உள்ளதால் தற்போது அதிகம் கவனம் செலுத்தி வருகிறார் அந்த வகையில் இயக்குனர் சுந்தர் சியுடன் கைகோர்த்து அரண்மனை மூன்றாம் பாகத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் ஆர்யா உடன் இணைந்து ராசி கண்ணா , சாக்ஷி அகர்வால், அண்ட்ரியா, விவேக், யோகி பாபு போன்றவர்களும் நடித்து அசத்தினர்.

நடிகர் ஆர்யாவுக்கு மிக முக்கிய ரோல் என்பதால் சிறப்பாக நடித்து அசத்தினார்.படம் எதிர்பார்க்கப்பட்டது ஓரளவு மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் ஓரளவு வசூல் வேட்டை பெற்று தற்போது சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

படம் திரையரங்கில் வெளியாகி சிறப்பாக பயணித்துக் கொண்டிருந்த நிலையில் இந்த திரைப்படம் தற்போது  OTT தளத்தில் வெளியாகியுள்ளது ஆம் ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நான்கு வாரங்களை கடந்து விட்டால் அந்த திரைப்படம் அடுத்ததாக OTT தளத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என கூறப்பட்டது.

அதையே தற்பொழுது அரண்மனை மூன்றாம் பாகம் செய்து உள்ளது ஜீ தமிழ் OTT தளம் தற்போது அரண்மனை மூன்றாம் பாகத்தை கைப்பற்றி உள்ளது இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்காதவர்கள் தற்போது இந்த ஜீ தமிழ் OTT தளத்தில் பார்த்து கண்டுகளிக்கலாம்.