சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு திணறவிட்ட புதுமணத் தம்பதியினர் கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது அதாவது விஜய் டிவியில் கடந்த ஐந்து பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் தற்பொழுது ஆறாவது சீசன் துவங்க இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பலரும் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளார்கள். மேலும் இதன் மூலம் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருபவர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வருகின்ற அக்டோபர் 2ம் தேதி அன்று 6வது சீசன் இந்நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. இதன் காரணமாக தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது பொது மக்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். பிக்பாஸ் சீசன் ஐந்து பெரிதாக பிரபலமடையாத நிலையில் இந்த சீசன் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதை விஜய் டிவி இப்படிப்பட்ட நிலையில் இந்த சீசனில் பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் டிடி, சூப்பர் சிங்கர் பிரபலம் ராஜலட்சுமி, பாரதி கண்ணம்மா சீரியல் ரோஷினி ஹரி பிரியன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது அண்மையில் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டு பெரிய சர்ச்சை ஏற்படுத்திய தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தம்பதியினர்கள் தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்களாம்.
இது குறித்து அவர்கள் வெளியிட்டதாவது இதுவரையிலும் எங்களை யூட்யூபில் பார்த்திருப்பீர்கள் இனிமேல் டிவில பாருங்க அதுவும் விஜய் டிவில என பதிவிட்டுள்ளார். இவ்வாறு இவர்கள் விஜய் டிவி எனக் கூறியது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.