தளபதி விஜய் சினிமா உலகில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் டாப் நடிகராக பார்க்கப்படுகிறார். இவர் இதுவரை ரசிகர்களை கவறும்படியான பல சிறந்த ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் அந்த வகையில் தற்போது தனது 66 வது திரைப்படம் ஆன வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க தில் ராஜு தயாரித்து வருகிறார் மற்றும் இந்த படத்திற்கு தமன் இசை அமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இதைத் தொடர்ந்து அடுத்து விஜய் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து..
தனது 67வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் சினிமாவில் என்ட்ரியான ஆரம்பத்தில் அதிகம் காதல் படங்களை கொடுத்தே ரசிகர்களை கவர்ந்தார். அது அவருக்கு கை கொடுத்தது ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்த விஜய் தொடர்ந்து தற்போது வரை ஆக்சன் படங்களிலேயே நடித்து வருகிறார்.
விஜயின் காதலுக்கு மரியாதை, லவ் டுடே, பூவே உனக்காக போன்ற படங்களில் விஜய் எவ்வளவு அழகாக காதலை வெளிப்படுத்தி இருப்பார். அது எல்லாம் நினைக்கும் பொழுது மீண்டும் விஜய் இது போன்ற காதல் படங்களில் நடிக்க மாட்டாரா என சிலர் ஏங்குகின்றனர். இருந்தாலும் அந்த மாதிரி கதாபாத்திரங்களில் இனி விஜய் நடித்தால் கூட..
சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் விஜய் தொடர்ந்து தற்போது ஆக்சன் படங்களில் நடித்து வருவதால் இப்போது அவருக்கு காதல் படம் செட்டாகாது. அது போன்ற படங்களில் விஜய் இப்போது நடித்தால் அதனை ரசிகர்களே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என விஜய்யை யோசிக்கிறார் போல..