நடிகர் அருண் விஜய் அண்மைக்காலமாக ஹீரோ வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் சூப்பராக நடித்து வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் தற்பொழுது கூட இயக்குனர் ஹரியுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து யானை திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்
இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன், செண்டிமெண்ட் திரைப்படமாக உருவாகியது. இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்கில் வெளிவந்து மக்களை கவர்ந்து இழுத்து சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இதுவரை யானை திரைப்படம் சுமார் ஒன்பது கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகரான அருண் விஜய் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து பேசி உள்ளார். நடிகை பிரியா பவானி சங்கர் நடிப்பில் எப்படி.. ரொமான்ஸில் எப்படி.. என கேட்டுள்ளனர். அதற்கு அருண் விஜய் பதிலளித்தது ரொமான்ஸ் சென்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் கலக்கி விடுவார்
ஆனால் அவருக்கு டான்ஸ் தான் கொஞ்சம் வராது அந்த விஷயத்தை எல்லாம் ரொம்ப வீக் என உண்மையை உளறிவிட்டார் அருண் விஜய் இதை அறிந்த பிரியா பவானி சங்கர் ரசிகர்கள் இந்த வருடத்தில் அதிக திரைப்படங்களில் நடிக்கும் ஹீரோயின்னாக பிரியா பவானி சங்கர் இருக்கிறார்.
அடுத்தடுத்த படங்களில் தனது அனைத்து விதமான திறமையும் வெளி காட்ட வேண்டியதாக இருக்கும் அதற்குள்ளையே டான்ஸ் ஆடுவதில் தனது திறமையை வளர்த்துக் கொண்டால் நல்லது மேலும் எந்த குறையும் இல்லாமல் சினிமா உலகில் ஜொலிக்கலாம், பட வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும் என பிரியா பவானி சங்கருக்கு ரசிகர்கள் அட்வைஸ் கொடுத்துள்ளனர்.