தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மிலர் ஆகிய திரைப்படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வருடம் மிகவும் மகிழ்ச்சியான நாள் என ஒரு ட்விட்டரை பகிர்ந்து உள்ளார் இவருடைய இந்த ட்விட் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அதாவது கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது இந்த இறுதி போட்டியில் உலகம் முழுவதிலும் உள்ள கால்பந்து ரசிகர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சித்தனர் அந்த உலக கோப்பை தொடரில் அர்ஜென்டினா அணி வென்று மூன்றாவது முறையாக சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று இருக்கிறது.
இதனால் அர்ஜென்டினா அணியின் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர். அர்ஜென்டினா வெற்றி பெற்றதை தொடர்ந்து மெஸ்ஸி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகர் தனுஷ். அதில் மெஸ்ஸி! வித்தியாசமான முடிவுகளும் சாத்தியம்!! மிகவும் தகுதியான வெற்றி என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் டி மரியா தேவைப்படும் சமயத்தில் நல்ல முறையில் விளையாடினார் மேலும் இந்த போட்டியின் ஹீரோவே எமி மார்டினெஸ்! இந்த உலக கோப்பை தொடரில் முழுவதும் கூட!! மேலும் இந்த வருடத்தின் மகிழ்ச்சியான நாளாக இது இருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகர் தனுஷ்.
இவருடைய இந்த பதிவு சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது. மேலும் நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் நடிக்க வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தீவிர விறுவிறுபாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இவர் நடித்து முடித்துள்ள வாத்தி திரைப்படம் திரையரங்குகளில் வெளிவர காத்திருக்கிறது.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் வெற்றி அடையவில்லை என்றாலும் வாத்தி திரைப்படம் கேப்டன் மில்லர் திரைப்படம் வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.