தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் உதயநிதி ஸ்டாலின். இவ்வாறு பிரபலமான நமது உதயநிதி சமீபத்தில் தான் தன்னுடைய நாற்பத்தி நான்காவது பிறந்தநாளை மிக பிரமாண்டமாக கொண்டாடியுள்ளார் இதனை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள்.
அந்த வகையில் தல அஜித்தின் வலிமை திரைப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரை அவர்கள் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து அதுமட்டுமில்லாமல் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதற்கு முக்கிய காரணம் பாலிவுட்டில் சூப்பர் ஹிட் அடித்த ஆர்டிகல் 15 என்ற திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்யப் போகிறார்களாம்.
இவ்வாறு உருவாகும் அந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பது மட்டும் இல்லாமல் அந்தத் திரைப்படத்திற்கு நெஞ்சுக்கு நீதி என டைட்டில் வைத்து உதயநிதியை நடிக்க வைக்க உள்ளார்கள். மேலும் சமீபத்தில் நடந்த தன்னுடைய பிறந்தநாளுக்கு ரசிகர்கள் தேவையில்லாத செலவுகள் செய்ய வேண்டாம் என உதயநிதி அறிவுரை செய்துள்ளார்.
அதற்கு மாறாக எனக்கு செலவு செய்ய வேண்டும் என வைத்திருக்கும் பணத்தை ஏழை எளிய மக்களுக்காக உதவுங்கள் என குறிப்பிட்டிருந்தார். மேலும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய உதயநிதி அவர்களிடம் தொகுபலினி விஜய் மற்றும் அஜித்தை ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.
அதற்கு பதிலளித்த உதயநிதி தளபதி விஜய் பார்த்தால் இன்னமும் எப்படி நீங்கள் இளமையாக இருக்கிறீர்கள் என்று கேட்பேன் அதேபோல தல அஜித்தை நேரில் கண்டால் ரசிகர் மன்றமே இல்லாமல் உங்களால் எப்படி இப்படி மாஸ் காட்ட முடிகிறது என்றுகேட்பேன் என்று கூறியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.