விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது 35 நாட்களை கலந்துள்ள நிலையில் இந்த சீசனில் ஏராளமான சர்ச்சைக்குரிய சண்டைகள் நடைபெற்ற வருவது வழக்கமாக இருந்து வருகிறது. மேலும் இந்த சீரியலில் ஜிபி முத்து, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி ஆகியோர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் தற்பொழுது பிக்பாஸ் வீட்டில் போட்டிகள் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. நிலையில் போட்டியாளர்களின் உண்மை முகம் தற்பொழுது ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது எனவே தங்களுடைய ஓட்டுகளின் மூலம் பலருக்கும் தங்களுடைய ஆதரவுகளை கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது விக்ரமனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது.
மேலும் அசீமும் தொடர்ந்து நாமினேஷனில் இருந்து வந்தாலும் எலிமினேஷன் ஆகாமல் இருந்து வருகிறார் இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட் வெளியாகியிருக்கிறது அதனை பற்றி தற்பொழுது பார்க்கலாம். அதில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் முதலாவதாக விக்ரமன் ராபர்ட் மாஸ்டர் தேர்வு செய்துள்ளார்.
இவரை தொடர்ந்து நிவாஸினியை அசீம், ராம், ஏடிகே ஆகியோர்கள் நாமினேட் செய்துள்ளனர். மேலும் ஜனனி, அசீம் ஆகியோரம் இந்த வாரம் நாமினேஷனில் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் அதிகமாக தனலட்சுமி வாக்குகளை பெற்றுள்ளார் ஏனென்றால் கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் தனலட்சுமி மிகவும் கடுமையாக விளையாடியிருந்தார்.
எனவே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் அவரை எச்சரித்து இருந்தார்கள் எனவே இந்த வாரம் தனலட்சுமி நாமினேட் செய்த உள்ளனர் தனலட்சுமி செய்த செயல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கடுப்பை ஏற்றி நிலையில் கமலஹாசன் அவர்கள் அறிவுரை கூறினார்கள் எனவே அதன்படி இந்த வாரம் தனலட்சுமி கமலஹாசன் அவர்களின் அறிவுரையை கேட்டு சூதானமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனலட்சுமிக்கு அடுத்ததாக நிவாஷினி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார் இவரும் பெரிதாக பிக்பாஸ் வீட்டில் வேலை மாற்றம் டாஸ் போன்றவற்றில் பெரிதாக ஈடுபடாமல் இருந்து வருகிறார் எனவே நிவாஷினி மற்றும் தனலட்சுமி இருவரில் ஒருவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற அதிக வாய்ப்பு இருக்கிறது.